சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு.. இந்தியாவில் ஆதரவு.. முஸ்லீம் பெண்கள் போராட என்ன காரணம்? இதுதான் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: ஈரானில் பெண்கள் ஹிஜாப்பிற்கு எதிராக போராடும் நிலையில்தான் இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் ஹிஜாப் வேண்டி போராடி வருகிறார்கள்.

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஈரானில் கடந்த சில நாட்களுக்கு முன் 22 வயது மாசா அமினி என்ற மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடந்த செப்டம்பர் 13ம் தேதி இவர் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்ற போது அங்கு "கலாச்சார போலீசார்" மூலம் கைது செய்யப்பட்டார்.

அவர் சரியாக ஹிஜாப்பை அணியாமல், முடி வெளியே தெரியும்படி ஹிஜாப் அணிந்து இருந்ததால் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இதன்பின் போலீஸ் டார்ச்சரில் அவர் கொலை செய்யப்பட்டார்.

பெட்ரோல் குண்டு வீச்சு: அமைதி பூங்கா தமிழகத்தை கலவரக் காடாக மாற்றும் சக்திகள்..சொல்வது பாஜக நாராயணன்பெட்ரோல் குண்டு வீச்சு: அமைதி பூங்கா தமிழகத்தை கலவரக் காடாக மாற்றும் சக்திகள்..சொல்வது பாஜக நாராயணன்

கொலை

கொலை

சில நாட்கள் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவரின் மரணம் ஈரானை உலுக்கி உள்ளது. அங்கு ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட தொடங்கி உள்ளனர். ஹிஜாப்பை தீ வைத்து எரித்து பெண்கள் கடுமையான போராட்டங்களை செய்து வருகின்றனர்.தலைநகர் முழுக்க கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டத்தில் இதுவரை 36 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த போராட்டம் தற்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஈரான்

ஈரான்

ஈரானில் பெண்கள் ஹிஜாப்பிற்கு எதிராக போராடும் நிலையில்தான் இந்தியாவில் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் ஹிஜாப் வேண்டி போராடி வருகிறார்கள். ஹிஜாப் அணிய வேண்டும் என்று கூறி தங்கள் உரிமைக்காக மாணவிகள் போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்திலும் 20க்கும் அதிகமான மனுக்கள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு விதமான விவாதத்தை இணையத்தில் ஏற்படுத்தி உள்ளது. இங்கே ஹிஜாப் வேண்டும் என்று கூறுபவர்கள் அங்கே இல்லை என்று கூறுவது ஏன் என்று கேள்விகளை நெட்டிசன்கள் சிலர் எழுப்பி உள்ளனர்.

இந்தியா

இந்தியா

ஆனால் இது மிக மிக சிம்பிளான விஷயம் என்று பெண்ணியவாதிகள் தரப்பு விளக்கம் அளிக்கிறது. இரண்டு பெண்களுமே தங்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். அவர்களின் தனிப்பட்ட தேர்விற்காக அவர்கள் போராடுகிறார்கள். அதாவது என்ன உடை அணிய வேண்டும். அணிய கூடாது என்பதை நாங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் எங்களை நீங்கள் வற்புறுத்த முடியாது. ஹிஜாப் அணிய கூடாது என்றும் நீங்கள் எங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று பெண்கள் தரப்பு இந்த போராட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

வித்தியாசம்

வித்தியாசம்

பெண்கள் ஈரானில் போராடுவது ஹிஜாப்பிற்கு எதிராக அல்ல.. அவர்கள் "Edalat, Azadi, hijab-e ikhtyari" (Justice, Freedom, and A Free Choice on Hijab) என்ற வாசகம் அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது நீதி, சுதந்திரம், ஹிஜாப்பை அணிவதில் தனிப்பட்ட தேர்வு என்ற தலைப்பில் போராட்டம் நடக்கிறது. அதாவது ஹிஜாப்பை அணிய வேண்டுமா கூடாதா என்பதை நாங்கள்தான் சுதந்திரமாக முடிவு செய்வோம் என்று மக்கள் கூறி உள்ளனர். அதாவது ஹிஜாப் வேண்டாம் என்று அவர்கள் சொல்லவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

அதையும் அணிய வேண்டுமா, வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். அதை நீங்கள் சொல்ல கூடாது என்றே சொல்லி வருகிறார்கள். சிம்பிளாக பெண்கள் கூறுவது சுதந்திரம் பற்றியது! எங்களுக்கு எங்கள் சுதந்திரம் வேண்டும். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும்.. என்ன உடை உடுத்த வேண்டும்.. என்ன பேச வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல கூடாது, என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். இரண்டு நாடுகளிலும் பெண்கள் போடுவது எதிர் எதிரானது அல்ல.. இரண்டு பேருமே போராடுவது தங்கள் உடை உரிமைக்காகத்தான்!

English summary
Woman's Right to Wear: Why Anti Hijab protest in Iran and Pro Hijab Protest in India are same?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X