பாரம்பரிய நடனமாடி வரவேற்ற பெண்கள், சிறுமிகள்.. சென்னையில் பிரதமர் மோடிக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு
சென்னை: சென்னை - கோவை வந்தே பாரத் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. வழிநெடுக பெண்கள், சிறுமிகள் பாரம்பரிய நடனமாடி வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை வந்தார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். முன்னதாக பிரதமர் மோடியை பாரம்பரிய நடனமாடி பெண்கள், சிறுமிகள் வரவேற்றனர். அதன்பிறகு சென்னை விமான நிலையத்தின் புதிய விமான நிலையத்தில் உள்ள அம்சங்களை பார்வையிட்டார்.

சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகை தருகிறார். ஐ.என்.எஸ் அடையார் ஹெலிபேட் தளத்தில் இருந்து கார் மூலம் வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் வழிநெடுக பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளனர். சாலையின் ஓரங்களில் வரவேற்பு பதாகைகளையும் வைத்துள்ளனர். பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க தொண்டர்களும் குவிந்துள்ளனர். அவர்களது வரவேற்பை ஏற்றபடி மாலை 4 மணியளவில் சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தை வந்தடைகிறார்.












Click it and Unblock the Notifications