Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்.. பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு.. தமிழக அரசு சொன்ன டேட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பேருந்துகள் கட்டணமில்லா பயணத் திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ரூ.888 வரை சேமிப்பு ஏற்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஒவ்வொரு நாளும் 50 சதவீதம் பேர் கட்டணமில்லாமல் பயணிப்பதாகவும், அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு மொத்தம் 16 ஆயிரத்து 146 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது திமுக தரப்பில் வாக்குறுதியில், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு பின், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் உடனடியாக அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் பல மூலம் இன்று பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சட்டசபையில் போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

கட்டணமில்லா பேருந்து திட்டம்

கட்டணமில்லா பேருந்து திட்டம்


இதனைத் தொடர்ந்து அந்தத் துறையினர் கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் 2021-22-ம் ஆண்டில் அரசு பேருந்துகளில் நாளொன்றுக்கு 1.21 கோடி பேர் பயணம் செய்தனர். 2022-23-ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்து உள்ளது. தினமும் பயணிப்பவர்களில் 50 சதவீதம் பேர் சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர்.

ரூ.888 வரை சேமிப்பு

ரூ.888 வரை சேமிப்பு

அவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள், மாணவர்கள், திருநங்கைகளாகும். 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர் ஆவர். பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டதில் ஒவ்வொரு பெண் பயணியும் மாதம் ஒன்றுக்கு ரூ.888 வரை சேமிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதுபோல பெண்கள் 256.66 கோடிக்கு மேல் பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர்.

 பெண்களின் பேருந்துகள் பயணம் உயர்வு

பெண்களின் பேருந்துகள் பயணம் உயர்வு

மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் 45.51 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இலவச பயண திட்டத்தால், அரசு பேருந்துகளில் பயணித்த பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 64.65 சதவீதமாக உயர்ந்துள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகர போக்குவரத்து கழகத்தின் 2,500 பேருந்துகள் மற்றும் 66 பணிமனைகளில் எச்சரிக்கை பட்டனுடன் கூடிய கண்காணிப்பு முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடன் ரூ.16,146 கோடி

கடன் ரூ.16,146 கோடி

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 72 சதவீதமாகும். மீதமுள்ள 28 சதவீதம் தனியார் பேருந்த்கள். அரசு போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 127 பேருந்துகள் உள்ளன. 10 ஆயிரத்து 152 வழித்தடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. பிப்.28ஆம் தேதியின்படி அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு மொத்தம் 16 ஆயிரத்து 146 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. தேனி மாவட்டம் மேலக்கூடலூரில் குமுளி பணிமனையில் பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+