“பெண்களை அடுப்படியில் இருக்க சொன்னா அது வடஇந்தியா.. 'முன்னேறுங்க' என்றால் தமிழ்நாடு” - தயாநிதி மாறன்
சென்னை: "வட இந்தியாவில் பெண்களை வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் அடுப்படியில் இரு, குழந்தைகளை பெற்றுக்கொள், இது தான் உங்கள் வேலை என சொல்கிறார்கள். ஆனால், இது தமிழ்நாடு. இங்கு பெண்களை முன்னேறுங்கள் என்கிறோம். பெண்கள் முன்னேற்றம் தான் தமிழ்நாட்டின் முன்னேற்றம்" என திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
சென்னையில் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லேப்டாப்களை வழங்கினார். சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் 898 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், மாநகராட்சி கவுன்சிலர் சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், "நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடும், இந்திய மாநிலங்களில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலினும் திகழ்கிறார்கள். நமது மாநிலத்தில் திராவிட சிந்தனையைத் தீப்பொறியாக ஏற்றியவர் பெரியார் தான். பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார்.
எங்கள் மாநில மாணவிகள் பெருமைப்பட வேண்டும். அவர்களைப் பற்றி நாங்களும் பெருமைப்படுகிறோம். அதனால் தான் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வட இந்தியாவில் பெண்களை வேலைக்கு செல்ல வேண்டாம், வீட்டில் அடுப்படியில் இரு, குழந்தைகளை பெற்றுக்கொள். இது தான் உங்கள் வேலை என சொல்கிறார்கள். ஆனால், இது தமிழ்நாடு. இங்கு பெண்களை முன்னேறுங்கள் என்கிறோம். பெண்கள் முன்னேற்றம் தான் தமிழ்நாட்டின் முன்னேற்றம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications