Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் முதல்முறை.. மகளிர் சுயஉதவிக்குழு ஹேப்பி.. உதயநிதி மாஸ் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் முதன் முறையாக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பூங்காக்களை பராமரிக்கும் பணிக்கான ஆணையினை உதயநிதி வழங்கினார்.

பூங்காக்களை பராமரிப்பதற்காக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளையாட்டு சாதனங்களைப் பராமரித்தல், நர்சரி மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

Women s self-help group Happy a mass project started by Udhayanidhi for the first time in Tamil Nadu

மகளிர் சுயஉதவி குழுக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமான நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை கொண்டு சுயஉதவி குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கி கடன் இணைப்புகள் போன்றவற்றை பெற்றுத்தந்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது.

அரசு திட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுவினரின் பங்களிப்பு இருக்க வேண்டும், அதன் மூலம் மகளிர் பயன் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை சுயஉதவி குழுவினர் மூலம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் உருவாக்கப்பட்ட 51 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பூங்காக்களை பராமரிப்பதற்காக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு, பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளையாட்டு சாதனங்களைப் பராமரித்தல், நர்சரி மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பூங்காக்களை பராமரிக்கும் பணிக்கான ஆணை மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சென்னை மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை வழங்குவதற்கான பணி நியமன ஆணை மற்றும், உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பராமரிப்பிற்கான உபகரணங்கள், சான்றிதழ், கையேடுகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் வாயிலாக சுமார் 500 சுயஉதவி குழுவினரின் குடும்பங்கள் நேரடியாக பயன் அடைவர்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ச.திவ்யதர்சினி. செயல் இயக்குனர் ஸ்ரேயா பி சிங், துணை ஆணையர் (கல்வி) சரண்யா அரி, சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+