தட்கலில் டிக்கெட்டை இப்படி புக் பண்ணுவது ஈஸி.. ரயிலில் பிராணியை கொண்டு செல்லலாமா? அட, IRCTC அசத்துதே
சென்னை: ரயில்களில் உங்கள் செல்லப்பிராணிகளை, உங்களுடனேயே கொண்டு செல்ல முடியுமா? செல்லப்பிராணிகளை ரயில்களில் கொண்டு செல்ல அனுமதி உள்ளதா? அதற்கான விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
தட்கலில் புக்கிங் செய்வதானால், பயணத்தேதிக்கு ஒரு நாள் முன்பே முன்பதிவு செய்ய முடியும்.. AC பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், AC அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு ஆரம்பமாகிறது. தட்கல் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே, லேப்டாப் அல்லது செல்போனில் Log In செய்து தயாராக இருப்பது நல்லது.

எத்தனை பேர்: பயணம் செய்ய போகிறவரின் பெயர், எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரங்களை தயாராக கையில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்யும்போது உடனுக்குடன் கேட்கும் தகவல்களை தர முடியும்.
டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, குறைந்த பெர்த்களை தேர்வுசெய்யலாம்.. காரணம், அவை பொதுவாக மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை தரப்படுபவை. இதனால், கன்பார்ம் டிக்கெட்டை பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும்.. லோயர் பெர்த்தில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு சற்று அதிகம் உள்ளது.
ப்ரீமியம் தட்கல்: அதேபோல, ப்ரீமியம் தட்கல் என்ற ஒரு வசதி இருப்பதும் பலருக்கு தெரிவதில்லை. தட்கலில் டிக்கெட் கிடைக்காதபோது, இந்த ப்ரீமியம் தட்கல் முறையில் டிக்கெட்டை முயற்சிக்கலாம்.
ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.. இதுவே IRCTC தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி 2 டிக்கெட்டுகள் மட்டுமே செய்ய முடியும். அப்படி டிக்கெட் புக் செய்யும்போது சாதாரண ரயில் டிக்கெட் புக்கிங் இல்லாமல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல, தட்கல் சேவையை பயன்படுத்தி ரயில் டிக்கெட் புக் செய்து உறுதியான பயணச்சீட்டை நீக்க விரும்பினால், அந்த கட்டணம் உங்களுக்கு திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
செல்லப்பிராணிகள்: இதுஒருபுறமிருந்தாலும், ரயிலில் கொண்டு செல்லும் உடமைகள் மிக முக்கியமானது. அதிலும் செல்லப்பிராணிகளை ரயிலில் கொண்டு செல்ல முடியுமா? என்று நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது.
முன்பெல்லாம் இதற்கு நிறைய சிரமங்கள் இருந்தன.. ஆனால், இனி ஆன்லைனிலேயே உங்கள் செல்லப்பிராணிக்கும் டிக்கெட் புக் செய்து ரயிலில் அழைத்து செல்ல முடியும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதற்கும் சில விதிமுறைகள் உள்ளன.
2 அல்லது 4 படுக்கை வசதிகள் கொண்ட முதல் வகுப்பு AC பெட்டியில் மட்டுமே செல்லப் பிராணிகள் அனுமதிக்கப்படும். மற்ற பயணிகள் புகார் தெரிவித்தால், செல்லப் பிராணிகள், ரயில்வே சரக்கு பெட்டிக்கு அனுப்பப்படும்.
முன்பதிவு: செல்ல நாய்களை முதல், AC வகுப்பிலும்; ரயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ், லக்கேஜ் மற்றும் பிரேக் வேனிலும் ஏற்றிச்செல்ல பதிவு செய்யலாம். பயணிகள் தாங்கள் பயணிக்கும் பெட்டியில், நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், AC முதல் வகுப்பு, கூபேயில் தங்குமிடத்தை பிரத்யேகமாக முன்பதிவு செய்ய வேண்டும். பயணியரின் ஒரு PNR-ல் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இதற்கான டிக்கெட் முன்பதிவு வசதி, இரண்டு மாதங்களில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்படுத்தப்படும். அதில், எந்தெந்த ரயில்களில் இந்த வசதி உள்ளது, அதற்கான விதிமுறைகள் என்ன, கட்டணம் எவ்வளவு போன்ற விபரங்கள் இடம்பெறும்..
டிக்கெட் புக்கிங்: பயணத்தின் முதல் சார்ட் தயாரானதுமே, வளர்ப்பு நாய் அல்லது பூனைகளை ரயிலில் ஏற்றிக்கொண்டுபோக பிரத்யேகமாக கூடுதல் டிக்கெட் ஒன்றை புக் செய்யவேண்டும். பயணியின் டிக்கெட் உறுதியானால்தான், செல்லப்பிராணிக்கும் டிக்கெட் உறுதியாகும்... ஒருவேளை ரயில் தாமதமானாலோ அல்லது ரத்தானாலோ செல்லப்பிராணிகளின் டிக்கெட்டுக்கான பணம் திருப்பித்தர மாட்டாது. பயணியின் டிக்கெட் செலவு மட்டுமே திருப்பி வழங்கப்படும்.
பயணிக்கும், செல்லப்பிராணிக்கும் டிக்கெட் உறுதியானதுமே, ரயில் புறப்படும் 3 மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேஷனுக்கு உங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து வரவேண்டும். உங்களது செல்லப்பிராணியின் டிக்கெட் நகலுடன், எல்லா தடுப்பூசிகளையும் செலுத்தியதற்கான சான்றிதழ்களும், தேவையான அடையாள அட்டைகளையும் கொண்டுவர வேண்டும்.
சான்றிதழ்கள்: ரயில் புறப்படும் 24-48 மணி நேரத்திற்கு முன்பு, டாக்டரிடமிருந்து பெற்ற உடல்தகுதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். ரயில்கள் ஸ்டேஷன்களில் நிறுத்தப்படும்போது, பயணிகள் இந்தப் பெட்டிக்கு வந்து தங்களின் செல்லப்பிராணிக்கு, சாப்பாடு அல்லது தண்ணீர் கொடுத்துவிட்டு போகலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications