சாமியை கும்பிட்டால் காய்ச்சலே வராதா? மனைவியின் நிலை பற்றி சத்யராஜ் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடவுளை வழிபடுபவர்கள் வீட்டில் யாருக்கும் காய்ச்சல் வருவதில்லையா? அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போவதில்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் மகள் சமீபத்தில் அவரது தாயார் 4 ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாகச் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்திருந்தார். தனது அப்பாதான் தனி பெற்றோராக இருந்து எங்களைக் கவனித்துக் கொள்கிறார் என்றும் கூறியிருந்தார். இந்த விசயத்தை சத்யராஜ் இதுவரை வெளியே பகிர்ந்து கொள்ளவே இல்லை.

actor sathyaraj tamil cinema

முதன்முறையாக இப்படி ஒரு செய்தி வெளியானதும் பலரும் அதிர்ந்து போனார்கள். சத்யராஜ் கடவுள் மறுப்புக் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். உடனே அவரது நிலைக்குக் கடவுளை அவமதித்துப் பேசியதுதான் காரணம் என்று ஆன்மிகவாதிகள் ஒரு கருத்தை முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் சத்யராஜ் இது குறித்து மனம் திறந்து ஒரு பேட்டியில் பேசி உள்ளார். இன்றைக்குப் பல கோடிகளில் நடிகர்கள் சம்பளம் வாங்குவது பற்றிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த அவர், "நான் உச்சத்திலிருந்த காலத்தில் ஒரு படத்திற்கு 15 முதல் 20 ஆயிரம்தான் சம்பளம். 'ஜப்பானில் கல்யாண ராமன்' படத்திற்கு வாய்ப்பு வந்தது. அது வெளிநாட்டில் ஷூடிங் என்பதால் அதிக சம்பளம் கேட்டு வாய்ப்பு கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். ஓசியிலேயே வெளிநாட்டைச் சுற்றிப் பார்த்துவிடலாம் என்று ஒரு நப்பாசை.

ஆகவே, அட்வான்ஸ் கூட வாங்காமல் ஷூட்டிங் போய் விட்டேன். படம் முடிந்த பின் பஞ்சு அருணாசலம் ஒரு செக் கொடுத்தார். திறந்து பார்த்தால் 1 லட்சம் சம்பளம். ஆடிப் போய்விட்டேன்.

இன்றைக்கு அந்தச் சம்பளத்தை எல்லாம் தாண்டி 200 கோடி, 300 கோடி எனச் சம்பளம் சொல்கிறார்கள். அதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. அதற்கான வியாபாரம் இருப்பதால் கேட்கிறார்கள். கொடுப்பவர் கொடுக்கிறார்கள். அதில் நான் கருத்துச் சொல்ல ஒன்றுமே இல்லை. என்னைப் பொறுத்தவரை அன்று 1 லட்சம் என்பது பெரிய சம்பளம்" என்று பேசி இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய சத்யராஜ், அவரது மனைவியின் உடல்நிலை பற்றி வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர், "இன்பம், துன்பம் இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஒரு கையில் ஆசை. மற்றொரு கையில் துன்பம். ஆசை அதிகமாகும் போது துன்பமும் அதிகமாகும். ஆசையைக் குறைத்துக் கொண்டால் பிரச்சினையே இல்லை. 'எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாக மாறும்' எம்.ஜி.ஆர் அவர் படத்தில் பாடி இருக்கிறார். அதுதான் என் வழியும்கூட.

என் மகள் மனைவியைப் பற்றிய செய்தியைச் சொன்ன பிறகுதான் ஊடகங்களுக்குத் தெரிந்தது. அதற்கு முன்பே என் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். சிவகுமார், பிரபு ஆகியோர் குடும்பத்திற்கு முன்பே தெரியும். கிட்டத்தட்ட நான்கரை வருடங்களுக்கு மேலாக மனைவி கோமாவில் இருக்கிறார். அவருடன் இத்தனை நாட்களை நாங்கள் கடந்துவிட்டோம். இவை அனைத்தும் சேர்ந்ததுதானே வாழ்க்கை என்பது? நாம் என்ன செய்ய முடியும்?

எவ்வளவுதான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் நான் என் குடும்பத்துடன் நிறைய நேரங்களைச் செலவழித்திருக்கிறேன். அதில் சமரசம் செய்ததே இல்லை. இப்போதுகூட வீட்டில் என் பேரக் குழந்தைகளுடன் நேரத்தை முழுமையாகச் செலவிடுகிறேன். எனக்கு நன்றாக டேபிள் டென்னிஸ் ஆடத் தெரியும். அவர்களும் ஆடுவார்கள். தினம் குழந்தைகளுடன்தான் விளையாடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

நாத்திக கருத்துகளை அதிகம் முன்வைத்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று சிலர் முன்வைக்கும் விமர்சனம் பற்றி சத்யராஜ், "சாமி கும்பிடுகின்ற எவ்வளவோ மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் யாருக்குமே உடல் சரியில்லாமல் போகவில்லையா? காய்ச்சல் வந்தது இல்லையா? தலைவலி வந்தது இல்லையா? தெய்வ பக்தி உள்ளவர்கள் யாருமே சாகவில்லையா?

குடும்பத்தோடு கோயிலுக்குப் போனவர்களின் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகவில்லையா? ஏதோ பைத்தியகாரத்தனமாக பேசக்கூடாது. ஆகவே, இந்த உளறலுக்கு நாம் பதில் சொல்ல முடியாது. பேசினால் பேசிவிட்டுப் போகட்டும் என விட்டு விடவேண்டியதுதான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+