ஐஐடி-யில் பிடிபட்ட உலகின் நீளமான இன மலைப்பாம்பு.. சென்னைக்கு வந்தது எப்படி? அதிகாரிகள் திகைப்பு
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த மலைப்பாம்புகள் சென்னை ஐஐடிக்குள் வந்தது எப்படி என்பது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. வரிக்கோடுகள் கொண்ட இந்த மலைப்பாம்பு உலகின் மிக நீளமான இனத்தை சேர்ந்தது ஆகும். அதோடு, அதிக எடை கொண்ட பாம்பு இனங்களில் மூன்றாவது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே இந்த மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பு எதுவும் இன்றி இந்த பாம்பு சென்னை ஐஐடிக்குள் வந்தது எப்படி என்பது புதிரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு ஐஐடி வளாகத்திற்குள் பாம்பு இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.
விஷத்தன்மை அற்றது?: இதையடுத்து உடனடியாக வேளச்சேரி மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பிடிக்கும் இருளர் என மூன்று இடங்களில் இருந்து தலா ஒரு குழு சென்றது. உடனடியாக பாம்பை பிடித்து கிண்டியில் உள்ள பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து செல்லும் இந்த மலைப்பாம்புகள் விஷத்தன்மை அற்றது என்பதால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியம் இல்லை" என்றனர்.
கடந்த காலங்களில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இரண்டு முறை பாம்புகள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐஐடியில் உள்ள செக்யூரிட்டி, பாம்பை பிடித்து அருகே உள்ள கிண்டி தேசிய பூங்காவில் விட்டதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் எதையும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு கடந்த மாதம் 23 ஆம் தேதியும் பாம்பு தென்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னைக்கு வந்தது எப்படி?: இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே இருக்கும் இந்த மலைப்பாம்புகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன. சென்னையில் உள்ள பாம்பு பூங்காவில் இருந்து குட்டியாக இருக்கும் போது இந்த பாம்பு தப்பித்து இருக்கலாம் என்றும் பின்னர் இனப்பெருக்கம் செய்து இருக்க சாத்தியம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இல்லையென்றால் சிலர் செல்லப்பிரணியாக வளர்த்து விட்டு மாட்டாமல் இருப்பதற்காக ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் பாம்பை விட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி சென்னையில் உள்ள பாம்பு பூங்கா இயக்குனர் ஆர். ராஜரத்தினம் கூறுகையில், இந்த இளம் மலைப்பாம்பு பாம்பு பூங்காவில் இருந்து தப்பித்து இருப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை" என்றார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications