இலாகாவை மாற்ற தயங்கமாட்டேன்! அமைச்சர்களுக்கு முதல்வர் வார்னிங்! உதயநிதி ஸ்டாலின் உடைத்த ரகசியம்!
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வழக்கமான அலுவல் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு, அமைச்சர்களுக்கு கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சரவையை மீண்டும் மாற்ற தயங்கமாட்டேன் என்பதையும் சரியாக செயல்படாவிட்டால் இலாகா மாற்றம் நிச்சயம் நடக்கும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அமைச்சரவை கூட்டம் முடிந்து வெளியே வந்த பல அமைச்சர்களின் முகம் வாடிக் காணப்பட்டிருக்கிறது.

இதனிடையே சென்னையில் நடைபெற்ற தொழிலாளர் நலத் துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்கண்ட தகவலை உறுதி செய்யும் விதமாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒழுங்காக வேலை செய்யாத அமைச்சர்களின் துறைகளை மாற்றிவிடுவேன் என தலைவர் வார்ன் செய்ததாக ரகசியத்தை உடைத்துப் பேசினார் உதயநிதி ஸ்டாலின். இதற்கு காரணம் இன்னும் பல அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதும் தேவையற்ற குற்றச்சாட்டுகளில் சிக்குவதுமே ஆகும்.
அமைச்சர்களது ஒவ்வொரு செயல்பாடுகளும் பாஜக, அதிமுக தரப்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் தேவையற்ற புகார்களில் சிக்கக் கூடாது என்பது தான் முதல்வரின் அட்வைஸாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஜூனியர் அமைச்சர்களை காட்டிலும் சீனியர் அமைச்சர்கள் கொடுக்கும் இம்சைகள் தான் முதல்வருக்கு கடும் கோபத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இலாகா மாற்றம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் பேசியதை உதயநிதி ஸ்டாலின் உடைத்துக் கூறியதால் திமுக எம்.எல்.ஏ.கள் பலரும் உற்சாகம் அடைய தொடங்கியுள்ளனர். காற்று நம்ம பக்கம் வீசாதா என இப்போதே பல சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் கனவு காண ஆரம்பித்துவிட்டனர்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications