நான் பத்ம சேஷாத்ரி பள்ளியின் டிரஸ்டிதான்.. அந்த பள்ளியை நான் நடத்தவில்லை.. ஒய் ஜி மகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஎஸ்பிபி பள்ளியில் நான் ஒரு டிரஸ்டிதானே தவிர அந்தப் பள்ளியை நான் நடத்தவில்லை என ஒய் ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஒரு ஆசிரியர் ராஜாகோபாலன் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக புகார் எழுந்தது. ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நடிகரும் பள்ளியின் தலைவர்களில் ஒருவருமான ஒய் ஜி மகேந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை.

டிரஸ்டி

டிரஸ்டி

நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டிதான். இந்த புகாரை பார்த்ததுமே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். முழுக்க முழுக்க இந்த பள்ளியின் நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வது எனது தம்பியும் அவரது மனைவியும்தான் நடத்துகிறார்கள். குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு கடிதம் எழுதியுள்ளேன்.

தாயின் பெயர்

தாயின் பெயர்

இந்த புகார்களால் எனது தாயின் பெயர் கெட்டுவிடக் கூடாது. மீண்டும் சொல்கிறேன். இந்த பள்ளிக்கு நான் ஒரு டிரஸ்டிதானே தவிர பள்ளியை ஏற்று நடத்தவில்லை. நான் எழுதிய கடிதத்திற்கு அவர்கள் அளித்த பதில்- இது போன்ற குற்றச்சாட்டுகள் இதுவரை வந்ததே இல்லை என்றார்கள்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

சமூகவலைதளங்களில் இந்த பாலியல் புகார் குறித்து அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். இந்த பள்ளியை நடத்துவதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. முழுக்க முழுக்க எனது தம்பியும் அவரது மனைவியுமே பார்த்துக் கொள்கிறார்கள் என்றார்.

ஒய் ஜி மகேந்திரன்

ஒய் ஜி மகேந்திரன்

ஆனால் ஒய் ஜியின் இந்த பதிலுக்கு சமூகவலைதளங்களில் டிரஸ்டி என்றால் என்ன என கேட்டு வருகிறார்கள். குற்றச்சாட்டு குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் இந்த புகார் குறித்து எங்கள் கவனத்திற்கு எதுவும் வரவில்லை. இந்த புகார் வந்தால் அது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+