ஈசிஆர் சாலையில் கார் விபத்து.. தோழியை இழந்தாரே யாஷிகா ஆனந்த்!.. இப்போ புதிய கார் வாங்கியிருக்காராம்
சென்னை: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் கார் சேதமடைந்த நிலையில் தற்போது புதிய காரை அவர் வாங்கியுள்ளார். அதன் விலை என்ன தெரியுமா?
பஞ்சாபை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் மாடலாக வலம் வருகிறார். துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
கடந்த 2018ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இவர் கைவசம் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார்.

யாஷிகா
காரை யாஷிகா ஆனந்த் ஓட்டினார். அவருக்கு அருகே அவரது வள்ளிச் செட்டி பவானி அமர்ந்திருந்தார். அவரது கார் ஈசிஆர் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துள்ளானது. இதில் தலைக்குப்புற கார் கவிழ்ந்ததில் யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

வள்ளிச்செட்டி பவானி
இந்த நிலையில் அவருடைய தோழி பவானி இறந்துவிட்டார். இவரது காரின் பின் சீட்டில் இருந்த ஆண் நண்பரகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற யாஷிகா ஆனந்த் உடல்நிலை தேறி தற்போது நலமாக இருக்கிறார்.

சினிமா
தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். விபத்துக்கு பிறகு அவர் வாங்கியுள்ள முதல் கார் இதுவாகும். புத்தாண்டு ஸ்பெஷலாக வோல்ஸ்வேகன் விர்டஸ் காரை யாஷிகா வாங்கியுள்ளார். இதன் விலை 22 லட்சத்திற்கு மேல் இருக்கும். காரின் புகைப்படத்தை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காரை கவனமாக ஓட்டுமாறு நெட்டிசன்கள் அறிவுறுத்தியும் வாழ்த்துகளை சொல்லியும் வருகிறார்கள். இன்னும் சிலர் குடிக்காமல் ஓட்டுங்கள் என்றும் கூறி வருகிறார்கள். இனி காரை ஓட்டவே மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் யாஷிகா ஆனந்த் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications