லெப்ட்.. ரைட்.. அங்கே பாருங்க.. சர்ச்சையான அண்ணாமலையின் படகு பயணம்.. ஃபிளாஷ்பேக் 2021
Year Ender 2021: அண்ணாமலை மேற்கொண்ட படகு பயணம் விமர்சனத்தை தாங்கி வந்தது
சென்னை: இந்த வருடம் மறக்க முடியாத சம்பவங்கள் தமிழகத்தில் எத்தனையோ நிகழ்ந்திருந்தாலும், அதில் குறிப்பிடும்படியாக மக்களால் பேசப்பட்டது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, படகில் சென்று மழைநீர் வெள்ளத்தை ஆய்வு செய்த சம்பவம்தான்... இன்று வரை நெட்டிசன்கள் இந்த விவகாரத்தை ட்ரோல் செய்து கொண்டே இருக்கின்றனர்!
கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் தமிழகத்தில் பலத்த மழை கொட்டி கொண்டிருந்தது.. குறிப்பாக சென்னை மாநகரமே வெள்ள நீரில் சிக்கி அவதிக்கு உள்ளானது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தார்..

ஆய்வு
இதற்காகவே ஒரு ஜீப்பை எடுத்து கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நேரடியாகவே ஆய்வு செய்தார்.. அந்த வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்று மக்களை சந்தித்தார். அதேபோல அதிமுகவும் தன் பங்குக்கு மக்களை சந்தித்து நிவாரண பணிகளை செய்து கொண்டிருந்தது.. இதனிடையே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன் கட்சி நிர்வாகி கரு.நாகராஜனுடன் சென்று ஆய்வு செய்தார்.. அதுவும் முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்..

வீடியோகிராபர்
இது சம்பந்தமான வீடியோவும் வெளியானது.. அதில், படகு ஒன்றில் ஏறி, அதில் உட்கார்ந்து கொண்டே, வீடுகளுக்கு வெளியே தென்பட்ட மக்களிடம் நிலவரத்தை கேட்டறிந்தார் அண்ணாமலை.. ஆனால் இது போட்டோஷூட் பாணியில் எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. காரணம், இந்த வீடியோ எடுப்பதற்கு முன்னதாக, அண்ணாமலையிடம் சம்பந்தப்பட்ட வீடியோகிராபர் ஏதோ பேசுகிறார்.. அங்கிருந்தோரை தள்ளி செல்லும்படி போட்டோ கிராபர் சொல்கிறார்.. கேமிரா ஆங்கிள் பற்றியும் அதில் பேசுவது தெளிவாக பதிந்திருந்தது..

அண்ணாமலை
அதேசமயம், அண்ணாமலை படகில் உட்கார்ந்திருந்தபோது, 2 சிறுவர்கள் படகில் இருந்து நடந்தவாறே அந்தமழை நீரில் சென்று கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு முழங்கால் அளவுக்கு தான் தண்ணீர் இருந்தது.. வீடியோகிராபர் அந்த 2 பேரையும் சற்று தள்ளி நடந்து போகுமாறு சொல்கிறார். இதுதான் பலரது கிண்டல் கேலிக்கும் இணையதளத்தில் விமர்சிக்கப்பட்டது.. மீம்ஸ்களும் ஏராளமான வெளிவர ஆரம்பித்தன.
Recommended Video

செட்டப்
இப்படியெல்லாம் செட்டப் செய்து நிவாரண பணி மேற்கொள்வது போல காட்டிக் கொள்ள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.. 2 பேர் ஈஸியாக தண்ணீரில் நடந்து செல்லும்போது, அண்ணாமலையும் நடந்தே செல்லலாமே? எதற்காக படகில் சென்றார்? முட்டி அளவு தண்ணீர் இல்லாத இடத்திற்கே படகில் செல்கிறார் என்றால், முட்டுக்கு மேல் இருந்தால் அண்ணாமலை என்ன செய்திருப்பார்? என்றும் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.. ஆக மொத்தம், இந்த படகு பயண வீடியோவானது, இந்த வருட நிகழ்வில் மறக்க முடியாத இடத்தை பெற்று விட்டது.












Click it and Unblock the Notifications