சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோ.. நோ.. சென்ட்டிமென்ட்டை தகர்த்த முதல்வர் ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு பறந்த ஸ்டிரிக்ட் உத்தரவு..!

மஞ்சள் நிற அரசியல் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக ஆட்சியில் மீண்டும் "சென்ட்டிமென்ட்" விவகாரம் தலைதூக்கி உள்ளது.. இதை பற்றிதான் முதல்வர் ஸ்டாலின் வரை சென்றுள்ளது..!

கருணாநிதியின் 60 ஆண்டுகால அரசியலில் அவருக்கு அடையாளமாக இருந்தது கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும்தான்..

பள்ளிகள் மூடப்பட்டால் என்ன.. மாணவர்களுக்கு 5 முட்டைகள், உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு பள்ளிகள் மூடப்பட்டால் என்ன.. மாணவர்களுக்கு 5 முட்டைகள், உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு

பொதுவாக அரசியல் வாதிகள் கலர் கலராக துண்டுகள் அணிவதுண்டு.. அல்லது கட்சியின் கொடி நிறத்தில் துண்டு அணிவது வழக்கம்...

 கருணாநிதி

கருணாநிதி

ஆனால் கருணாநிதி அதற்கு மாறுபட்டவர்... அரசியலில் குதித்த காலத்தில் இருந்தே திமுக கட்சியின் கரையுடன் கூடிய கைத்தறி துண்டுதான் அணிவார்... பிறகு 1996ம் முதல் வாழ்நாள் முழுவதும் தோளில் தொங்கியது மஞ்சள் துண்டு மட்டும் தான்... இந்த மஞ்சள் துண்டினை கருணாநிதி அணிந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகளிடம் பல்வேறு விமர்சனங்களையும், சந்தேகங்களையும், இது தொடர்பாக கிளப்பி கொண்டேயிருந்தது..

 பகுத்தறிவு

பகுத்தறிவு

சென்ட்டிமென்ட் காரணமாகத்தான், கருணாநிதி மஞ்சள் துண்டு அணிகிறாரோ? பகுத்தறிவு பேசிக் கொண்டே இப்படி செய்வது சரியா? என்று மாற்று கட்சியினரும் விடாமல் தங்கள் கருத்துக்களை சொல்லி கொண்டே இருந்தனர்.. இந்நிலையில், தற்போது திமுக 10 வருடம் கழித்த ஆட்சியை பிடித்துள்ளது.. மறுபடியும் மஞ்சள் கலர் சென்ட்டிமென்ட் குறித்த பேச்சு ஆரம்பமாகி உள்ளது.

 மஞ்சள் பை புரட்சி

மஞ்சள் பை புரட்சி

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும், துணிப் பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மஞ்சள் பை புரட்சியை ஏற்படுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். மீண்டும் மஞ்சள் பை எடுத்துச் செல்வோம்... மஞ்சள் பை ஒன்றம் அவமானத்தின் அடையாளம் கிமடயாது.. சுற்றுச்சூழல் காப்பவர் என்ற உயரிய அடையாளம் என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்று பொதுமக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்..

 சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

இதையெல்லாம் பார்த்த அரசு அதிகாரிகள், ஒருவேளை மறுபடியும் மஞ்சள் கலர் சென்ட்டிமென்ட்டை திமுக கையில் எடுக்கிறதோ என்று நினைத்துள்ளனர் போலும்.. இனிமேல் அரசு நிகழ்ச்சிகளின்போது மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் தரலாமா என்று அதிகாரிகள் தரப்பில் கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயத்தை அறிந்த ஸ்டாலினோ, "இனி மஞ்சள் நிறமே கூடாது.. அந்த மாதிரி எதுவுமே எங்கியும் இருக்கக்கூடாது" என்று படுஸ்ட்ரிக்டாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவிட்டாராம்..!

English summary
Yellow Sentiment: CM Stalin has ordered, government officials not to do Yellow Politics, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X