சர்வதேச யோகா தினம்..உங்களை தேடி யோகா' ஈஷாவின் இலவச யோகா வகுப்புகள்..ஆன்லைனிலும் கற்கலாம்
சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று 21ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியா முழுவதும் 'உங்களை தேடி யோகா' என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம் முன்னெடுத்துள்ளது. உங்கள் இருப்பிடத்தில் யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்தப்பட்சம் 15 பேர் ஒன்றிணைந்தால் ஈஷாவின் யோகா பயிற்றுநர்கள் நேரில் வந்து யோகா கற்றுக்கொடுப்பார்கள்.

இவ்வகுப்பில், யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா க்ரியா போன்ற மிகவும் எளிமையான அதேசமயம் சக்திவாய்ந்த யோக பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுகுதண்டும் நரம்பு மண்டலமும் வலுபெறும், மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உங்கள் இருப்பிடத்தில் யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பயணிகளுக்கென தனியாக யோகா வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஆதியோகி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர். அதேபோல், ஐ.என்.எஸ் அக்ரானி, விமான படை கல்லூரி, வெள்ளலூரில் உள்ள சிறப்பு அதிரடிப் படை வளாகம் போன்ற இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications