ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு அதிகாரம் இருக்கா? அதேதான் இங்கேயும்.. சு.வெங்கடேசன் காட்டம்!
சென்னை: ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ... அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
ஆளுநரின் செய்திகுறிப்பு
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 30, 2023
நிறுத்தி வைப்பு.
ஆளுநரை நீக்க
இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ
அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை
ஆளுநரே.
இல்லாத அதிகாரத்தை
பயன்படுத்துகிற
உங்கள் பழக்கத்தையே
நிறுத்துங்கள்.
தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள். pic.twitter.com/zEg9cyx78R
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகிய இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், பணியில் சேர்க்க பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.
இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆளுநரை நீக்க ராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ... அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை ஆளுநரே. இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள். தீமைக்கு விசுவாசமாக இருப்பதைக் கைவிடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானபோது, "அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம். கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்துமீறலை அனுமதிக்காது தமிழ்நாடு!" எனப் பதிவிட்டிருந்தார்.
-
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications