வங்கிகளின் E-KYC முறையிலும் வந்த புதிய ட்விஸ்ட் கருணையின்றி, இரக்கமின்றி வாழ வேண்டும் போலவே!
சென்னை: 30 நிமிடத்தில் உங்களை நினைத்தே பார்க்க முடியாத கடன்வலையில் சிக்க வைக்க முடியும்.. இப்போது ஏஐ உதவியுடன் புதிய வகை மோசடி நடக்கிறது. தற்போது பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் E-KYC முறையைப் பயன்படுத்துகின்றன. இதில் ஆவணங்கள் தேவையில்லை, முக அடையாளம் மற்றும் மொபைல் எண் (OTP) இருந்தால் போதும், 5 முதல் 10 நிமிடங்களில் கடன் ஒப்புதல் கிடைத்துவிடும். உங்கள் அடையாளத்தை வைத்து அவர்கள் எடுத்த கடனை, அடுத்த 10 நிமிடத்தில் வேறு ஒரு கணக்கிற்கு மாற்றிவிட்டு, போனை உங்களிடம் கொடுத்துவிட்டு மறைந்து விடுவார்கள்.
"30 நிமிடத்தில் உங்களை நினைத்தே பார்க்க முடியாத கடன்வலையில் சிக்க வைக்க முடியும்.. இப்போது ஏஐ உதவியுடன் புதிய வகை மோசடி நடக்கிறது.அவர்களுக்கு உங்களின் பணம் தேவையில்லை.. அவர்களுக்கு தேவை உங்களுடைய பாஸ்வேர்டு தான் தேவை.. அத்துடன் உங்களுடைய அன்பு வேண்டும்.. புதிதாக உதவி தேவை என்று புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. இந்த உதவி தேவை என்கிற மோசடி, மால், மெட்ரோ ஸ்டேஷசன், மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடக்கிறது..

வயதானவர்களை குறிவைத்து மோசடி
இந்த மோசடியாளர்கள் நன்கு நம்பிக்கையாக பேசுவார்கள்.வயதானவர்கள், நடுத்தர வயதானவர்களை குறிவைத்தே செயல்படுகிறார்கள்.. அவர்கள்,போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறுவார்கள். அவர்கள் உங்களிடம் எனக்கு பென்ஷன் வருதா, அரசின் மானியம் வந்துள்ளதா என்று மொபைலில் பார்த்து கூறுங்கள் என்று ஆரம்பிப்பார்கள்.. அதேபோல் தப்பான பக்கத்தை கிளிக் செய்துவிட்டேன்.. இதனை சரி செய்ய உங்கள் உதவி தேவை என்று கேட்பார்கள்.. உடனே நீங்களும் பார்ப்பீர்கள்.. அதில் வீடியோ கால் ஆக்டிவேட் ஆகிருக்கும்... ஸ்கிரீன் ரெக்கார்டில் கேமரா ஆன் ஆகியிருக்கும். அதில் முக அங்கீகாரத்திற்கான அனுமதியும் இணைக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக உங்களை ஸ்கிரீன் வீடியோ மூலம் பார்த்துக் கொண்டிருப்பார்.
பயோமெட்ரிக் ஸ்கேம்
நீங்கள் அவருக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் பயோ மெட்ரிக் டேட்டாவை அவர்கள் கலெக்ட் செய்து விடுவார்கள்.. இது சாதாரண மோசடி கிடையாது.. இது ஏஐ ஐடன்டிட்டி பயோமெட்ரிக் ஸ்கேம்.. அவர்களுக்கு உங்கள் பணம் தேவையில்லை.. அவர்ககளுக்கு நீங்கள் தான் வேண்டும்..
போனை டச் செய்து பார்த்தால் போதும்
நீங்கள் போனை டச் செய்தாலே போதும். அதை பார்க்கும் போது உங்கள் முக அமைப்பு அங்கீகாரம் ஆக்டிவேட் ஆகும். இறுதியாக அவர்கள் அனுப்பும் கோடுவை பயன்படுத்துவீர்கள். ஒட்டுமொத்தமாக பிங்கர் பிரிண்ட், வாய்ஸ் மற்றும் முகம் என உங்களது மூன்று பயோமெட்ரிக் அக்சஸ் அவர்களுக்கு கிடைத்துவிடும். அதனை வைத்து மார்டன் ஏஐயில் உங்களை போன்ற மிகவும் அசல் மாதிரியான டிஜிட்டல் க்ளோன் உருவாக்கி விடுவார்கள்.
முக அங்கீகாரம் போதும்
அதை வைத்து அடுத்து என்ன செய்வார்கள் தெரியுமா? ஸ்கேமர்ஸ், நீங்களே வீடியோவில் தோன்றி பேசுவது போல் ஏஐயை வைத்து உருவாக்கி, ஆன்லைன் லோன், கன்சியூமர் பைனான்சிங், கிரெடிட் cash போன்றவை உங்கள் முக அமைப்பு அங்கீகாரம் மற்றும் வாய்ஸ் அங்கீகாரத்தை வைத்து எடுத்துவிடுவார்கள்.
இனி எப்படிதான் வாழ்வது இவ்வுலகில்!!! கருணையின்றி, இரக்கமின்றி....
— SKP KARUNA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@skpkaruna) February 23, 2026
Beware of this new scam... pic.twitter.com/bkwMLJh6AH
30 நிமிடத்தில் கடன்காரர்கள் ஆவீர்கள்
அடுத்த 30 நிமிடத்தில் உங்கள் பெயரில் பெரிய அளவில் கடன் வாங்கிவிடுவார்கள்.. நீங்கள் லட்சத்திலோ, கோடிகளிலேயே பணத்தை இழக்க வேண்டியதிருக்கும். எனவே முகம் தெரியாதவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று போய் சிக்கலில் சிக்கி கொள்ளாதீர்கள்.. அடுத்தவர்களின் போனை எந்த காரணம் கொண்டும் வாங்கி பயன்படுத்த வேண்டும். அவர்களின் போனின் ஸ்கிரீனை பார்க்க வேண்டாம்.. உங்களுக்கு தெரியாதவர்களிடம் இருந்து வரும் எந்த வீடியோ அழைப்பையும் ஏற்காதீர்கள்.. கேமராவை பாருங்கள் என்று யார் கூறினாலும் பார்க்க வேண்டாம்.. அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம்.. ஏனெனில் ஏஐ மூலம் உங்கள் முக அங்கீகாரம் உள்ளிட்ட தரவுகளை வைத்து மோசடி நடக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள் " இவ்வாறு கூறினார்.
தெளிவான விஷயம்
கடன் வாங்குவது உங்கள் பெயரில் இருக்கும், ஆனால் பயன்படுத்தப்பட்ட போன் வேறொருவருடையது என்பதால் போலீசாரால் திருடனைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தத் தரவுகள் அனைத்தும் கிளவுட் மூலம் நொடிப் பொழுதில் பரிமாறப்படுவதால், அடுத்த 30 நிமிடத்தில் உங்கள் பெயரில் கடன் வாங்கப்பட்டுவிடும்.
தற்காப்பு நடவடிக்கைகள்
முன்பின் தெரியாதவர்கள் தங்கள் போனை உங்கள் முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து வீடியோ எடுப்பது போலத் தெரிந்தால் உடனே விலகிவிடுங்கள். தேவையில்லாத நபர்களிடம் உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் சொல்லாதீர்கள் (குரல் பதிவு செய்யப்படலாம்).
ஆதார் பயோமெட்ரிக் லாக்
உங்கள் ஆதார் கைரேகை மற்றும் முக அடையாளத்தை m-Aadhar செயலி மூலம் 'லாக்' செய்து வையுங்கள். இது இருந்தால், யாராலும் உங்கள் அனுமதியின்றி உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்தி கடன் வாங்க முடியாது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications