என் கூட பேச மாட்டியா.. பேச மாட்டியா.. 22 வயது பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞன்
சென்னையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: "காவ்யா.. என் கிட்ட பேச மாட்டியா.. பேச மாட்டியா" என்று கேட்டு கேட்டு, 15 இடங்களில் காதலியின் உடலில் கத்தியால் குத்தியுள்ளார் காதலன்!
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கவின். 24 வயதான இவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஆனால் காலேஜில் படிக்கும்போதிருந்தே காவியா என்ற பெண்ணை விரும்பி வந்துள்ளார். காவ்யாவுக்கு 22 வயது.
இந்நிலையில், நேற்று சாயங்காலம் இருவரும் திருவான்மியூர் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

15 இடங்கள்
ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், கடும் ஆத்திரம் நிறைந்த கவின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவ்யாவை குத்த தொடங்கினார். கை, வயிறு, என 15 இடங்களில் சரமாரியாக வெறிபிடித்தவாறு குத்தி கொண்டே இருந்தார்.

போலீசில் ஒப்படைப்பு
இதில், ரத்த வெள்ளத்தில் காவ்யா மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து பயந்துபோன கவின், அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் பொதுமக்கள் விரட்டி பிடித்து கவினை போலீசில் ஒப்படைத்தனர். உயிருக்கு போராடிய காவ்யாவையும் அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

ஆத்திரம்
இதனிடையே காவ்யாவிடம் போலீசார் விசாரணையில் நடத்தினர். அப்போது, "கவின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஒரு மாசமாக நான் கவினிடம் பேசுவதை தவிர்த்தேன். நேற்று சாயங்காலம்கூட நான் பேசவில்லை. அதனால்தான் ஆத்திரமடைந்து, என் கூட பேசமாட்டியா என்று கேட்டு கேட்டு கத்தியால் குத்தினார்" என்றார் காவ்யா.

சிகிச்சை
முதல்கட்டமாக இந்த தகவல் வெளியாகி உள்ளது என்றாலும், காவ்யாவுக்கு சிகிச்சை முடிந்த பிறகுதான் இது சம்பந்தமான விஷயங்கள் மேலும் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications