"திருநங்கைகள்" மட்டுமே குறி வைத்து.. இனிக்க இனிக்க பேசி.. வலையில் வீழ்த்தி.. விளைவு ஒரு தற்கொலை!

திருநங்கைகளை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநங்கை என்றாலே ஒரு கண் வைத்துவிடுவாராம் முகமதுவுக்கு.. ஏமாந்தவர்கள் கிடைத்தால், இனிக்க இனிக்க பேசி, வலையில் விழ வைத்து.. அவர்களுடன் தனிக்குடித்தனம் நடத்தி.. முடிந்தவரை பணத்தையும் கறந்துவிட்டு, இறுதியில் அதோ கதியாக விட்டுவிடுவாராம்!

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பிரியங்கா... இவர் ஒரு திருநங்கை.. இவர் முகமது உசேன் என்பவரை காதலித்துள்ளார்... 8 மாதங்களுக்கும் மேலாக இந்த காதல் நீடித்து வந்துள்ளது.

youth cheated transgenders and arrested near thoothukudi

ஒரு கட்டத்தில் பிரியங்காவிடம், முகமது கல்யாணம் செய்ய விரும்பினார்.. முகமது கப்பலில் வேலை பார்ப்பதாக சொன்னதால், எப்படியும் வாழ்க்கை சிறப்பாக இருக்க போகிறது என்ற கனவில் பிரியங்கா மிதந்தார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.. நாளடைவில், பிரியங்காவின் டெபிட் கார்டுகளை முகமது பயன்படுத்த தொடங்கினார்.

கொஞ்ச நாள் கழித்துதான் பிரியங்காவுக்கு தெரிந்தது, பேங்கில் 2 லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார் முகமது.. இதை பற்றி பிரியங்கா கேட்டபோது, உன் உறவே தேவையில்லை என்று சொல்லிவிட்டு போய்விட்டார்... ஆனால் 2 லட்சத்துக்கு பதிலை காணோம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை ஸ்டேஷனில் புகார் தந்தார்.. போலீசாரும் அது குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த சமயத்தில்தான், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் என்ற இடத்தில் யுவஸ்ரீ என்ற திருநங்கை கடந்த வாரம் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட செய்தி வந்தது.. அவரது போட்டோவும் சோஷியல் மீடியாவில் வெளியானது.. அந்த திருநங்கை யுவஸ்ரீ யார் என்பதை விசாரிக்க போலீசார் முயன்றபோதுதான், முகமதுவின் பெயர் அடிபட்டது.

இப்படி, 2 திருநங்கைகளை ஏமாற்றிய முகமதுவை போலீசார் தேடி வந்தனர்.. பிறகு தூத்துக்குடியிலேயே தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.. அப்போது, திருநங்கை யுவஸ்ரீயை ஏமாற்றி தனிக்குடித்தனமே நடத்தி வந்துள்ளார் என்பதும், அவரையும் பணம், நகை பிடுங்கி ஏமாற்றிவிட்டு, கடனாளியாக்கிவிட்டார் என்பதும் தெரியவந்தது.

இவரால் ஏற்பட்ட கடன் தொல்லையாலேயே யுவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. திருநங்கை என்றாலே அவர்களில் யாராவது ஏமாந்தால், வலையில் வீழ்த்தி பணமோசடியை செய்வாராம் முகமது... முகமதுவிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+