Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உருகி உருகி லவ் பண்ணேன் சார்.. ஏமாத்திட்டா சார்.. காசை வாங்கி கொடுங்க சார்.. கதறிய கீரிப்புள்ள!

காதலிக்கு செலவு செய்த பணத்தை திரும்ப கேட்டு காதலன் தகராறு செய்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காதலிக்கு செலவு செய்த பணம் திரும்ப வேண்டும்.. காதலன் கோரிக்கை- வீடியோ

    சென்னை: "அவளை நான் எப்படியெல்லாம் லவ் பண்ணேன் தெரியுமா.. இதுவரைக்கும் 3 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருக்கேன்.. ஆனால் என்னை ஏமாத்திட்டு போய்ட்டாள்.. அந்த காசை திருப்பி வாங்கி தாங்க" என்று கையில் ரத்தம் சொட்ட சொட்ட கீரிப்புள்ள போலீசிடம் ரகளை செய்துள்ளார்!

    சென்னை மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்கி. ஆனால் கீரிப்புள்ள என்று பட்டப்பெயரை வைத்துள்ளார். இவருக்கு வயசு 21 ஆகிறது. மெக்கானிக் வேலை பார்க்கிறார்.

    நேற்றிரவு மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தள்ளாடியபடியே வந்தார் கீரிப்புள்ள. பிறகு ஸ்டேஷன் வாசலில், அவராகவே பேச ஆரம்பித்தார். 'நான் ஒரு பெண்ணை லவ் பண்ணேன். அவளும் என்னை லவ் பண்ணாள். ஆனால் இப்போ என்னை லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாள்" என்று சொன்னார்.

    புலம்பல்

    புலம்பல்

    ஆனால் கீரிப்புள்ள செம போதையில் இருந்ததால், ஏதோ உளறுகிறார் என்று நினைத்து, அங்கிருந்த போலீசார் இதை பெரிசாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும் கீரிப்புள்ள திரும்ப திரும்ப இதையே சொல்லி கொண்டு நின்றார். அப்போதும் போலீசார் இந்த புலம்பலை கண்டுகொள்ளவே இல்லை.

    ரத்தம் கொட்டியது

    ரத்தம் கொட்டியது

    அதனால் ஆத்திரமடைந்த கீரிப்புள்ள, பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்தார். மாம்பழத்தை அறுப்பது போல் சரசரவென கையில் அறுத்துக்கொண்டு நின்றார். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட ஊற்றியது. அப்போதும் போலீசார் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் இன்னும் டென்ஷன் ஆகிவிட்ட கீரிப்புள்ள, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே போய் நின்று கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். இதற்கு பிறகுதான் போலீசார் அந்த நபரை கூப்பிட்டு விசாரித்தனர்.

    3 ஆயிரம் ரூபாய்

    3 ஆயிரம் ரூபாய்

    அப்போது கீரிப்புள்ள, லவ் பண்ணபோது, "அந்த பொண்ணுக்கு 3 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சிருக்கேன். அந்த பணத்தை எனக்கு வாங்கி தாங்க, என்னை ஏமாத்திட்ட அந்த பொண்ணு மீது நடவடிக்கை எடுங்க" என்று கோரிக்கை வைத்தார். அதற்கு போலீஸ்காரர்களோ, "இப்போ நீ போதையில இருக்கே.. போதை தெளிந்ததும் வா.. நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

    நியாயம்

    நியாயம்

    ஆனால் இதை கீரிப்புள்ள ஏற்றுக் கொள்ளவில்லை. "சரி.. நான் இங்க இருந்தால் எனக்கு நியாயம் கிடைக்க போறது இல்லை. நான் அந்த காதலி வீட்டு முன்னாடியே போய் தகராறு செய்றேன். அப்போ நீங்க வருவீங்க இல்லை?" என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    ஸ்டேஷன் வாசல் முன்பு வந்து நின்றது, போதையில் தள்ளாடியது, கையில் பிளேடால் கிழித்து கொண்டு நின்றது, நடுரோட்டில் தற்கொலை முயற்சிக்கு ஓடியது, கோரிக்கை விடுத்தது, ரகளை செய்ய போவதாக சவால் விட்டு சென்றது என.. கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தையே பரபரப்பாக்கிவிட்டார் மிஸ்டர் கீரிப்புள்ள!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+