சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ ஆம் சரண்டர்.. ஜெயில்ல போட்றாதீங்க ப்ளீஸ்! வீடியோவில் கதறிய டிடிஎஃப் வாசன்! விழுந்த அடி அப்படி!

Google Oneindia Tamil News

சென்னை : சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து உடன் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த யூட்யூபரான டிடிஎஃப் வாசன், இனிமேல் அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் எனவும், என்னை கைது செய்யச் சொல்லி எனது வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விட வேண்டாம் என கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இணையதளங்களிலும் சரி சமூக வலைதளங்களிலும் சரி கடந்த இரண்டு நாட்களாக டிடிஎஃப் வாசன் என்ற பெயர் அடிக்கடி அடிபடுவதை ஏராளமானோர் பார்த்திருப்பார்கள் குறிப்பாக 90 கிட்ஸ்கள் தொடங்கி 2கே கிட்ஸ்கள் வரை டிடிஎஃப் வாசன் மிகப் பிரபலம்..

மின்னல் வேகத்தில் மட்டும் பைக் ஓட்டுவதால் அவருக்கு இவ்வளவு ரசிகர்களா? என பல்வேறு கேள்விகள் இருந்தாலும், அதிவேகத்தில் வாகனங்களை இயக்க சொல்லி, 2கே கிட்ஸ் இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.

தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! சும்மா இருந்த ஜிபி முத்துவை ஊதி கெடுத்த டிடிஎஃப் வாசன்! புது ட்ரெண்ட்! தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! சும்மா இருந்த ஜிபி முத்துவை ஊதி கெடுத்த டிடிஎஃப் வாசன்! புது ட்ரெண்ட்!

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

இந்நிலையில் தான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎஃப் வாசன். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவுடன் அவர் மேற்கொண்டு மின்னல் வேக சாகச பயணம் தான் தற்போது அவருக்கு வினையாக வந்திருக்கிறது. வாகன நெருக்கடி மிகுந்த சாலையில் 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற வாசன் மரண பயத்தை காட்டிவிட்டார் ஜி பி முத்துவுக்கு. எந்தப் பிடிமானமும் இல்லாமல் எதிரில் வரும் வாகனங்களைக் கண்டு ஜிபி முத்து கதறிய நிலையில் காமெடி செய்த டிடிஎஃப் வாசனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.

ஜிபி முத்துவுடன் ரைட்

ஜிபி முத்துவுடன் ரைட்

மேலும் பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து ஹெல்மெட் கூட அணியாமல் இருந்தது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காமெடிக்காக என்றாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் டிடிஎஃப் வாசல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அடுத்தடுத்து செய்திகள் வெளியான நிலையில் பிடிஎஃப் வாசனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இந்த நிலையில் தான் இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் சரண்டர் ஆகி விடுகிறேன் என டிடிஎஃப் வாசன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மன்னிப்பு

மன்னிப்பு

அந்த வீடியோவில் பேசி உள்ள டிடிஎஃப் வாசன்," நகைச்சுவைக்காகவே ஜிபி முத்து அண்ணாவுடன் நான் இந்த வீடியோவை எடுத்தேன். அவர் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டியதில்லை. நான் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலே வண்டியை ஓட்டியதால் அந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் நான் வேண்டும் என செய்யவில்லை. வீடியோவை பார்க்கும் சாதாரண மக்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என தான் பார்க்கிறார்கள். எனவே ஜிபி முத்து அண்ணாவுடன் காமெடிக்காக தான் நான் அந்த வீடியோவை செய்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய விவகாரமாக ஆகும் என்ன நினைக்கவில்லை.

ஸ்பாயில் பண்ணிராதீங்க..

ஸ்பாயில் பண்ணிராதீங்க..

இதற்கு முன் பிரச்சனை வந்த போதே நான் மெதுவாக வண்டி ஓட்ட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் தெரியாமல் இப்படி நடந்து விட்டது. செய்தி சேனல்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான், தெரியாமல் செய்துவிட்டேன். இதற்காக என்னை கைது செய்ய வேண்டும் லைசென்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள். இது என்னை ரொம்ப பாதித்துவிட்டது. இனிமேல் நான் இப்படி வண்டி ஓட்ட மாட்டேன். என்னை கைது செய்து ஜெயிலில் அடைத்து என் வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விடாதீர்கள். நான் செய்தது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
A video of Youtuber TTF Vasan, who was traveling on a two-wheeler at lightning speed with social media celebrity Gp Muthu, shouted that he will not drive at high speed from now on and asked him to not arrest me and not to spoil my life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X