சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை ஜாதி பெயரை சொல்லி விரட்டியடித்த தீட்சிதர்கள்!பாய்ந்த வழக்கு
20 நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது போலீஸ்ர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சிதம்பரம்: பெண் பக்தர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம் பல மேடையில் (கனகசபை) ஏறிபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்குவதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சிற்றம்பல மேடையில் (கனக சபை) ஏறி வழிபட அனுமதிப்பது வழக்கம்.
ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நடை முறைக்கு தடை விதிக்கப்பட்டது... இப்போது தொற்று குறைந்து, ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நெறிமுறைகள்
இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பழைய முறையிலேயே சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்... எனவே, கடந்த 10-ம் தேதி கோயிலில் நடந்த பொதுதீட்சிதர்கள் கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டது.

சக்திகணேஷ்
அப்போது சக்திகணேஷ் தீட்சிதர் உள்ளிட்ட சில தீட்சிதர்கள் பக்தர்களை பழையபடியே சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி வழிபட அனுமதிக்கலாம் என்றனர்.. இதற்கு மற்ற தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. எனினும், சக்திகணேஷ் தீட்சிதர் சம்பவத்தன்று சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏற சென்றார். அப்போது சிலர் அவரை தாக்கி, தள்ளிவிட்டுள்ளதாக தெரிகிறது.. எனவே, இதுகுறித்து சக்தி கணேஷ் சிதம்பரம் நகர போலீசில் புகார் தந்தார்.

ஜெயசீலா
அந்த புகாரின்பேரில் போலீசார், சிவசெல்வம் தீட்சிதர், சபேச தீட்சிதர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்நிலையில் இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஜெயசீலாவை சாமி கும்பிட மீண்டும் கனகசபைக்கு அழைத்துச் சென்றுள்ளார்..

ஆபாச பேச்சு
சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலா.. 37 வயதாகிறது.. இவரும் நடராஜர் கோயிலுக்கு சென்று சிற்றம்பல மேடைக்கு(கனகசபை) செல்ல முன்றார்... ஆனால், அப்போதும் தீட்சிதர்கள் சிலர் அவரை தடுத்து திட்டி அனுப்பியுள்ளார்.ஜெயசீலாவை தடுத்ததுடன், ஆபாசமாக பேசியும் சாதிரீதியாகவும் திட்டி, தாக்கி வெளியே அனுப்பியதாக தெரிகிறது.. இதுகுறித்து ஜெயசீலாவும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணை
இந்த புகார் தொடர்பாக, 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்... கோவிலில் கோவில் தீட்சிதர்களே தாக்கிக் கொண்டது, பெண்ணை தாக்கி வெளியே அனுப்பிய சம்பவம் குறித்து போலீசில் கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு என தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிவபக்தர்கள் கலங்கி போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications