அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் ருசியான பண்ருட்டி பலாப்பழம் வழங்கிய அமைச்சர்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
சென்னை: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பண்ருட்டியிலிருந்து வாங்கி வரப்பட்ட பலாப்பழத்தை வழங்கியிருக்கிறார்.
வேளாண்மைதுறை மீதான மானியக் கோரிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இந்த பலாப்பழத்தை விநியோகம் செய்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தினம் தோறும் ஒன்று அல்லது இரண்டு துறைகள் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று வேளாண்மைத்துறை, மீன் வளத்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.
வேளாண்மைத் துறை சார்பில் ஏற்கனவே வேளாண் பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் நேற்றைய தினம் பெரிதாக எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
ஆனால் அதே வேளையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை என்பதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை உயர் அதிகாரிகளுக்கு பண்ருட்டி பலாப்பழத்தை கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கே பலாப்பழங்கள் எடுத்துச்செல்லப்பட்டு டோர் பை டோராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் வழங்கியுள்ளனர். பண்ருட்டி பலாப்பழத்தில் ருசி மிகுதியாக இருக்கும் என்பதால் பல எம்.எல்.ஏ.க்களும் இதனை உடனடியாக ருசி பார்க்கத் தொடங்கினர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற எந்த பேதமும் இல்லாமல் பலாப்பழங்கள் வழங்கப்பட்டன. பாமக உறுப்பினர்கள் கூட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடுத்த பலாப்பழத்தை தட்டாமல் வாங்கிக் கொண்டனர்.
மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முழுமையாக நிறைவுறும் வரை இன்னும் என்னென்ன பரிசுகளெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications