பழனி கோயிலுக்கு வந்த கேரள பெண்.. தங்கும் விடுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்? பகீர் தகவல்
கொச்சி : கேரளாவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உடல் நலகுறைவு ஏற்பட்டதற்கு சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவிலுக்கு சென்றபோது தங்கும் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியதால் பரபரப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்
கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று நபர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா; 895 பேர் மரணம்
உடனடியாக கண்ணூர் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும் சென்றோம்.

மூன்று பேர் கடத்தினர்
அப்போது பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்று விட்ட நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச் சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்தனர். பின்னர் என்னைத் தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

விரட்டியடித்தனர்
காலையில் தங்கும் அறையில் இருந்து தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறிறேன். கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்து விரட்டி அடித்தனர். வேறுவழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டடோம் . காமக் கொடூரர்கள் செய்த சித்திரவதையால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

கேரள போலீஸ் விசாரணை
இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனிக்கு வந்த பெண்ணை காம கொடூரர்கள் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இதுகுறித்து பழனி போலீசாரிடம் கேட்டபோது போலீசார் இந்த சம்பவம் உண்மையல்ல என மறுத்து வருகின்றனர். அதேநேரம் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.