கோவை பிரபல நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை.. வெண்டிலேட்டர் துளையால் வந்த வினை! ஷாக் தகவல்
கோவை: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் தங்க நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார். இந்நிலையில் தான் கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகைக்கடை என்பது அடுக்குமாடி தளங்களில் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் நகைக்கடை ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு சென்றனர்.

இந்நிலையில் தான் இன்று காலையில் அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். அப்போது நகைக்கடையின் 2வது, 3வது தளத்தில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அங்கிருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக நகைக்கடையின் உரிமையாளர்கள், உயரதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். காட்டூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் நகைக்கடைக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தான் திடுக்கிட நகை கொள்ளையின் பின்னணி வெளியானது.
அதாவது நகைக்கடையின் வெண்டிலேட்டர் துளையின் வழியே உள்ளே நுழைந்த ஒருநபர் தனது முகத்தை சட்டையால் மூடிக்கொண்டு 2வது, 3வது தளத்தில் உள்ள தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றதும், அதன்பிறகு அந்த நபர் தனது சட்டையை கார் பார்க்கிங்கில் விட்டு விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த நகைக்கடையில் இருந்து மொத்தம் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளைப்போன நகைக்கடை மட்டுமின்றி அருகே உள்ள பிற கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். மேலும் இந்த நகைக்கடை கொள்ளையில் ஒருவர் மட்டுமே உள்ளே நுழைந்து இருந்தாலும் அவருக்கு பின்னால் மேலும் சிலர் இருக்கலாம். அவர்கள் கொள்ளை நடந்தபோது நகைக்கடைக்கு வெளியே பதுங்கி இருந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் கொள்ளையில் ஈடுபட்டோரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளனர். சம்பவம் தொடர்பாக நகைக்கடை ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications