10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை இலுப்பநத்தம் பகுதியில் வசித்து வருபவர் ரங்கராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி(36). சொந்த ஊர் கரூர்.
இலுப்பநத்தம் திருவள்ளுவர் நகரில் தங்கியிருந்து சொந்தமாக டாக்ஸி ஓட்டி வருகிறார். இவர்களுடைய மகன் நிக்கேஷ் (15). சிறுமுகை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

மகனை கண்டித்தார்
சிறுவன் நிகேஷுக்கு அவரது தந்தை ரங்கராஜ் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் நிகேஷ் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். அதிகமாக செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தால் படிப்பு கெட்டு விடும் என கூறிய ரங்கராஜ் மகனை கண்டித்ததோடு செல்போனையும் வாங்கிக்கொண்டு கேரளாவிற்கு கடந்த மாதம் 26-ம் தேதி சென்றுள்ளார்.

தூக்குபோட்டு தற்கொலை
அன்று முதல் சிறுவன் நிகேஷ் சோகமாகவே இருந்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய மாணவன் நிக்கேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த உமா மகேஸ்வரி வீட்டில் மகன் சேலையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கதறி அழுத தாய்
இதனையடுத்து மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து தாய் உமா மகேஸ்வரி கதறி அழுதுள்ளார். பின்னர் மாணவனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications