புதர் மண்டிய பூங்காவில்..17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. முக்கிய குற்றவாளி மணிகண்டன் சரண்

Subscribe to Oneindia Tamil

கோவை: பிறந்த நாளன்று 17 வயது சிறுமியை சீரழித்த 6 பேர் கொண்ட கும்பலின்.. மிக முக்கியமான குற்றவாளியான மணிகண்டன் கோர்ட்டில் சரணடைந்துள்ளான். இதையடுத்து மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது. காதலி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆவார்.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பார்க்கிற்கு இரவு 8 மணி அளவில் வந்துள்ளனர்.

அப்போது அங்கு திடீரென வந்த 6 இளைஞர்கள், காதலனை தாக்கிவிட்டு அந்த சிறுமியை பார்க்குக்கு பின்பக்கம் இருந்த ஒரு காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணின் ஆடைகளை மிரட்டி கழட்டி வீடியோ எடுத்ததுடன், அந்த பெண்ணையும் சீரழித்துள்ளனர்.

வன்கொடுமை

வன்கொடுமை

இந்த 6 பேரில் மணிகண்டன் என்பவன்தான் முதலில் வன்கொடுமை செய்துள்ளான். ஒருவர் பெண்ணை சீரழிக்க, இன்னொருவர் வீடியோ எடுக்க, மற்றவர்கள் யாராவது வருகிறார்களா என காவல் காக்க.. என்று படுபாதக செயல் அந்த பகுதியில் அரங்கேறி உள்ளது. அது மட்டுமல்ல.. வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, "எங்களிடம் வீடியோ இருக்கு.. எப்ப கூப்பிட்டாலும் வரணும்" என்று சொல்லிதான் அனுப்பி உள்ளனர்.

போக்சோ

போக்சோ

இறுதியில் அந்த பெண் உருக்குலைந்த நிலையில் தன் வீட்டிற்கு சென்று கொடூரத்தை பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறாள். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யவும், கார்த்தி, மணிகண்டன், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதில், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் வீடியோ எடுத்த கார்த்தியை தவிர மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

சரண்

சரண்

தலைமறைவான மணிகண்டனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்நிலையில் மணிகண்டன் கோவை மகளிர் கோர்ட்டில் சரணடைந்தான். இதனையடுத்து மகிளா நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்பு சரணடைந்த மணிகண்டனை வருகின்ற 17 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

கொலை முயற்சி

கொலை முயற்சி

சரண் அடைந்த மணிகண்டன் மீது ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளனவாம்.. இவர் மீது கொலை வழக்கு கூட இருக்கிறதாம்.. ஆஜானுபாகுவான தோற்றத்தை உடையவர் மணிகண்டன். அதனால், இவர் போலீஸ் வேலைக்குகூட முயற்சி செய்து.. அதன்படி வேலையும் கிடைத்துள்ளது.

போலீஸ் வேலை

போலீஸ் வேலை

ஆனால், வேலையில் சேருவதற்கு முன்பு, மணிகண்டனுக்கும் இன்னொரு நண்பனுக்கும் சண்டை வந்துள்ளது. அந்த சண்டையில் மணிகண்டனை நண்பன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்ட.. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அந்த நண்பரை வெட்டி கொன்றே விட்டாராம்.. அதனால்தான் மணிகண்டனால் போலீஸாக முடியவில்லை என்கிறார்கள்.

கார்த்தி

கார்த்தி

ஏற்கனவே கொலை கேஸ் உள்ளது.. இப்போது போக்சோவும் சேர்ந்து கொண்டுள்ளது என்பதால், இனி ஒருபோதும் மணிகண்டன் போலீசாக வாய்ப்பே இல்லை! அதேபோல, இந்த வழக்கில் எஞ்சியுள்ள குற்றவாளியான கார்த்தியை தேடி வருகிறார்கள். கார்த்தி மீது ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+