கனிமொழி எம்.பி. முன்னெடுத்த முயற்சி! ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேலை கொடுக்க முன்வந்த 2 நிறுவனங்கள்!
கோவை: கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. எடுத்த முயற்சியின் காரணமாக 2 நிறுவனங்கள் வேலை கொடுக்க முன் வந்துள்ளன.
கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி வந்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலானார்.
இந்நிலையில் நேற்றிரவு கோவை சென்ற கனிமொழி, இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து லஷ்மி மில் சிக்னல் வரை ஷர்மிளா இயக்கிய டவுன் பஸ்ஸில் பயணித்தார்.

அப்போது கனிமொழியிடம் பெண் கண்டக்டர் டிக்கெட் கேட்டதாகவும் அதற்கு எனது கெஸ்டிடம் எப்படி டிக்கெட் கேட்கலாம் என ஓட்டுநர் ஷர்மிளா அவர் மீது கோபப்பட்டு பேருந்து உரிமையாளரிடம் புகார் சொல்ல சென்றதாகவும் தெரிகிறது. அப்போது நடந்த வாக்குவாதத்தின் காரணமாக Vee Vee பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை பணி நீக்கம் செய்துவிட்டார்.
இந்தச் செய்தி நேற்றைய தினம் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது. இதனிடையே நேற்று மாலை பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய கனிமொழி எம்.பி., வேறு வேலை கிடைப்பதற்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி அவர் முன்னெடுத்த முயற்சியின் காரணமாக கோவையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பேருந்து நிறுவனமும், ரெட் டாக்ஸி நிறுவனமும் ஷர்மிளாவுக்கு ஜாப் ஆஃபர் வழங்கியுள்ளது. இதில் எந்த நிறுவனத்தில் சேர்வதற்கு ஷர்மிளா விருப்பப்படுகிறாரோ அதில் சேர்ந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications