பாம்பு வந்துவிட்டது.. மீட்பு குழுவிற்கு அவசரமாக வந்த போன்.. சென்று பார்த்தால் ஷாக்.. கோவையில் பகீர்!
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் ஒரு வீட்டின் கழிவறையில் 35 பாம்புகள் மொத்தமாக குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
நேற்று முதல்நாள் கோயம்புத்தூரில் உள்ள கோவில்மேடு பகுதியில் இருந்து பாம்புகளை மீட்கும் மீட்பு குழு ஒன்றுக்கு அவசரமாக போன் வந்துள்ளது. எங்கள் வீட்டு கழிப்பறையில் பாம்பு ஒன்று இருக்கிறது. அந்த பாம்பு பெரிதாக உள்ளது என்று கூறியுள்ளனர்
இதை அடித்து கொல்ல முடியாது என்று தோன்றுகிறது. உடனே வந்து அந்த பாம்புகளை மீட்டு செல்லுங்கள் என்று தகவல் கொடுத்துள்ளனர்.

வேகமாக வந்தனர்
இதையடுத்து அங்கு வேகமாக மீட்பு குழு வந்தது. அந்த வீட்டின் கழிப்பறையில் வீரியன் வகை பாம்பு ஒன்று இருந்துள்ளது. இந்த பாம்பு மிக பெரிதாக இருந்து உள்ளது. சரி ஒரு பாம்பு தானே அதை எளிதாக பிடித்து விடாமல் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக பாம்பு பிடிக்கும் மீட்பு குழுவை சேர்ந்த முரளி, ஒரு பையை எடுத்துக் கொண்டு, பாம்பை பிடிக்க அருகில் சென்று உள்ளார்.

பெரும் அதிர்ச்சி
பாம்ப்பை பிடிக்க அருகே சென்றவருக்கு பெரிய அதிர்ச்சி. அந்த ஒரு பாம்பு அங்கே பெரிய குடும்பத்தையே நடத்தி உள்ளது. ஆம், அந்த பாம்பு அங்கேயே குஞ்சு பொறித்து குட்டிகளை பெற்றுள்ளது. நிறைய குட்டிகளை பாம்புகள் அங்கு போட்டுள்ளது. அம்மா பாம்பு உட்பட மொத்தம் 36 பாம்புகள் அங்கே இருந்துள்ளது. இதை பார்த்து மீட்பு குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கஷ்டப்பட்டு
35 பாம்புகள் வீரியன் வகை பாம்புகள் ஆகும். எல்லாம் குட்டி குட்டி பாம்புகள் ஆகும். இந்த பாம்புகள் சில நாட்களுக்கு முன்பு இங்கே குஞ்சு பொறிக்க வந்து இருக்கலாம். நீண்ட நாட்களாக அங்கே இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இது அதிக விஷத்தன்மை கொண்ட வீரியமான பாம்பு ஆகும். இதையடுத்து அந்த பாம்பை மீட்க பெரிய அளவில் பைகள் கொண்டு வரப்பட்டது.

காட்டுக்குள் விட்டனர்
கடைசியாக அந்த பாம்புகளை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கஷ்டப்பட்டு பிடித்தனர். அதன்பின் அந்த பாம்புகளை எடுத்துக் கொண்டுபோய் கோவையில் இருக்கும் காட்டு பகுதி ஒன்றில் விட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 35 பாம்புகள் ஒரு வீட்டின் கழிப்பறையில் இருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications