65 வயசுல செய்ற வேலையா இது.. அதுவும் பள்ளிக்கூடத்தில்.. தாத்தாவை கொத்தாக தூக்கிய போலீஸ்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவர் கைதானார்
கோவை: 65 வயசாகியும் தாத்தாவுக்கு புத்தி மாறவில்லை.. பேத்தி வயதுள்ள மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார்.. இது சம்பந்தமான விஷயம் வெளியே தெரிந்ததும், விரைந்து வந்த போலீஸ் தாத்தாவை கைது செய்து உள்ளே வைத்துவிட்டது.
பொள்ளாச்சி அருகே வசித்து வருபவர் தங்கவேல்.. இவருக்குதான் 65 வயசாகிறது.. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்.. இவரது மனைவி அய்யம்மாள்.. 55 வயசாகிறது.. ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

தினமும் காலையில் அய்யம்மாளை ஸ்கூலில் கொண்டு போய் விட்டுட்டு வருவது தங்கவேல்தான்.. அப்படி மனைவியை ஸ்கூலில் விட்டுவிட்டு, இவரும் பின்னாடியே ஸ்கூலுக்குள் வருவாராம்.. மதியான நேரத்தில் பள்ளி வளாகத்தில் ஒரு ரூம் இருக்கிறதாம்.. அந்த ரூமில், அதே ஸ்கூலில் படிக்கும் 10 வயது மாணவியை அழைத்து செக்ஸ் டார்ச்சர் தருவாராம்.
யாரிடமும் இதை சொல்ல முடியாமல், அளவுக்கு அதிகமாக மனவேதனையால் தவித்திருக்கிறாள் அந்த குழந்தை.. தினமும் இது எல்லை மீறி நடக்கவும், வேறு வழியில்லாமல் தலைமை ஆசிரியை அய்யம்மாளிடம் கண்ணீருடன் இதை சொல்லி உள்ளார்.. ஆனால் புகார் அளித்தும் அய்யம்மாள் இதை கண்டுகொள்ளவே இல்லையாம்.. அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவியை அடித்து மிரட்டியும் வந்துள்ளதாக தெரிகிறது.
அதனால், மாணவி வேறு ஒரு ஸ்கூலுக்கு மாறி போய்விட்டார்.. சம்பந்தப்பட்ட மாணவியை ஸ்கூலில் காணாமல் தங்கவேல் ரொம்பவே திணறிவிட்டார்.. அதனால், நேரடியாக அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று,
"ஏன் இப்போதெல்லாம் ஸ்கூலுக்கு வருவதில்லை" என்று கேட்டுள்ளார்.. வீடு வரைக்கும் தங்கவேல் தேடி வந்துவிட்டதை பார்த்து பயந்துபோன மாணவி, அலறி அடித்து கொண்டு பெற்றோரிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் உடனடியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டபோதுதான், தங்கவேலுக்கு உடந்தையாக மனைவி அய்யய்யம்மாள் இருந்ததும் தெரியவந்தது.. இதையடுத்து, போக்சோ மற்றும் மாணவியை மிரட்டுதல், அடித்தல் போன்ற வழக்குகளில் பதிவுசெய்து மகளிர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.. இறுதியில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இந்த ஜோடியை ஜெயிலிலும் அடைத்துள்ளது!
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications