எப்படி சிக்கியிருக்காரு பாருங்க.. அரசுப் பேருந்தில் டிக்கெட் வாங்காமல் அடாவடி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே கோவை - பொள்ளாச்சி மாநகராட்சிப் பேருந்தில் ஏறிவிட்டு நானும் அரசு ஊழியர்தான் என்று டிக்கெட் வாங்காமல் எஸ்கேப் ஆனவரைப் பிடித்து பேருந்து நடத்துநர் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் பெரும் பங்கு வகிப்பது தமிழக அரசுப் பேருந்துகள்தான். சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான பேருந்துகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பல்வேறு பணிகளுக்காகப் பயணம் செய்து வருகின்றனர்.

coimbatore bus viral video

கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் கல்வி, பணி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கோவையில் மெட்ரோ ரயில் போன்ற வசதிகள் இல்லாததால் உள்ளூர் போக்குவரத்து தேவையைத் தீர்த்து வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அரசுப் பேருந்துகள்தான்.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. கிணத்துக்கடவு பகுதியில் இந்தப் பேருந்தில் ஏறிய ஒருவர் அரசுப் பேருந்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்காமல் தான் ஊழியர்தான் என்று கூறியுள்ளார். ஆனால், என்னிடம் அடையாள அட்டை இல்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, அதற்கு கண்டக்டர் அடையாள அட்டை இல்லை என்றால் டிக்கெட் வாங்க வேண்டும் இல்லையா என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர் மறுபடியும் நானும் ஊழியர்தான். 13 ரூபாய்க்கு போய் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் நீங்கள் எதற்கு ஊழியர் என்று கூறினீர்கள் என்று கண்டக்டர் கேட்க, அதற்கு அந்த நபர் மன்னியுங்கள் என்று கூறியுள்ளார். இதில், கடுப்பான கண்டக்டர் நீங்கள் எப்படி ஊழியர் என்று கூறலாம். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டு துளைத்துள்ளார்.

அப்போது, அந்த நபர் நான் கிணத்துக்கடவு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன் என்று கூற, அதற்கு கண்டக்டர் தனியார் பள்ளியில் வேலை பார்த்துவிட்டு கார்ப்பரேஷன் பஸ்ஸில் ஏறி நீங்கள் ஊழியர் என்று கூறலாமா என்று கேட்க அந்த நபர் மன்னியுங்கள் என்று கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து, கண்டக்டர் அந்த நபரிடம் வண்டியில் டிக்கெட் பரிசோதகர் ஏறி சோதனை செய்தால் ஒரு மாதம் எங்களை சஸ்பெண்ட் செய்வார்கள். நாங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது. நான் வண்டியை போலீஸ் நிலையத்திற்கு விடுகிறேன் என்ற வாக்குவாதம் செய்கிறார். இதில் அந்த நபர் அரண்டு போகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் விசராணை நடத்தியபோது அந்த நபர் தனியார் பள்ளியில் வேலை செய்யவில்லை. அந்த நபர் எதற்காக அப்படி கூறினார் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+