கோவை அருகே பணத்துக்காக ஆற்றில் காலை உள்ளே இழுத்து மூழ்கடிக்கும் கும்பல்.. பாக்யராஜ் பரபரப்பு வீடியோ
கோவை: சில ஆயிரம் பணத்திற்காக ஆற்றில் குளிப்போரின் காலை உள்ளே இழுத்துவிட்டு சாகடிக்கும் கும்பல்களை பற்றி நடிகர் பாக்யராஜ் பதிவிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார். அவர் வெளியிட்ட ஒரு வீடியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பாக்யராஜ் கூறுகையில், "ஒரு சில விஷயங்களை கேள்விப்படும் போது நமக்கு ஆறாத ரணமாக நமக்கு உறுத்திக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு விஷயத்தை பற்றி நாம் பார்ப்போம்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 15 கிலோ மீட்டர் தூரத்தில் வனபத்திரகாளியம்மன் கோயில் இருக்கிறது. அதுக்கு பக்கத்தில் இருக்கும் நெல்லித்துறை இவை எல்லாம் நாங்கள் சினிமா படப்பிடிப்பு எடுக்கும் இடங்கள் ஆகும். அங்கு வந்து அம்பரம்பாளையம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆறு நீலகிரி மலையில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆற்றுக்கு சனி ஞாயிறு பிக்னிக் வருபவர்கள், கோயிலுக்கு வருபவர்கள் அங்கே போய் ஆற்றில் இறங்கி நீச்சல் அடிப்பது என்பது வழக்கம்.. இப்படி நீச்சல் அடிக்கும் போது, என்னவென்று பார்த்தால், சுழலில் சிக்கி தண்ணீர் எங்கோ சுற்றி கொண்டு போய்விட்டது என்று சொல்வார்கள்.. அப்படி தேடிப்பார்த்தால் உள்ளே உடல் கிடைக்காது, சுழலில் சிக்கி பாறை இடுக்கில் மாட்டியிருப்பார்கள் என்று அந்தபகுதியில் சொல்வார்கள்..
அப்போது பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் ஒருவர் தண்ணீருக்குள் ரொம்ப நேரம் மூழ்கி இருந்து எடுத்துகிட்டு வருவதற்கு ஒரு ஆள் இருக்கிறார் என்று சொன்னார்கள்.. அப்புறம் அந்த ஆளை போய் கேட்டால், அவரோ இல்லீங்க.. ஐந்துநிமிடம் மூச்சை அடக்கி சுழலில் போய் பார்த்தால் எனக்கே என்னாகும் என்று பயந்தார்.. அவரிடம் பணம் தருவதாக சொன்னவுடன் 1000 என்று சொல்லியிருக்கிறார்கள்..
நெஞ்சு பொறுக்குதில்லையே#tamil #shortstories #kbr #bhagyaraj pic.twitter.com/6OYNUHOwoy
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) February 12, 2024
ஆனால் முடியாது என்று சொல்ல, 2000, 2500 என ஆட்களை பொறுத்து , எப்படியாவது உடல் கிடைத்தால் போதும் என்று சொன்ன உடன், அவர் ஒரு இடம் தேடுவார்.. அப்புறம் இன்னொரு இடம் தேடுவார்.. அப்புறம் 3 நிமிடம் , 4 நிமிடம், ஐந்து நிமிடம் கழிச்சு வெளியே பாடியை எடுத்துக் கொண்டு வருவார்.. அவரால் ஐந்து நிமிடம் மூச்சை தம் கட்ட முடியும்.. அதன்பிறகு பேசிய பணத்தை உடலை வாங்கியவர்கள் கொடுத்துவிடுவார்கள்.. இது இப்படி அடிக்கடி நடப்பது உண்டு. அதற்கு அப்புறம் தான் பின்னாளில் ஒரு நாள் தெரிந்தது..
அந்த இளைஞருக்கு மூழ்கி மூச்சை தம் கட்டும் பழக்கம் இருப்பதால், உள்ளே தண்ணீருக்கு அடியில் மூழ்கி டப்புன்னு காலபுடிச்சு இழுத்து பாறைக்கு இழுத்து சென்று, பாறைக்கு அடியில் சொருகிவிடுவார்.. அப்புறம் எல்லாம் வந்து தேடும் போது, அந்த இளைஞரே வந்து எடுத்துக் கொடுப்பது போல் வந்து எடுப்பார்,.இதை தொழில் மாதிரியே ஒருத்தன் பண்ணிக்கொண்டு இருந்தான் என்றால் எவ்வளவு கஷ்டம். ஒருத்தனை அடிச்சு புடுங்குறது,ஏமாற்றி புடுங்குறதை விட மோசமானது.. தண்ணீருக்கு அடியில் தம் கட்டுவதற்கான பவர் இருப்பதை தவறாக பயன்படுத்தி எவ்வளவு தப்பா அதை பயன்படுத்தி இருக்கான் என்று நினைக்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை" என்று பாக்யராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications