களம் ரெடியா இருக்கு! போய் கலக்குங்கள்! பூத் ஏஜென்டுகளுக்கு விஜய் அன்புக் கட்டளை
சென்னை: அரசியலுக்கு வந்து ஆட்சி அமைப்பதே மக்கள் நலனுக்காகத்தான். களம் தயாராக இருக்கிறது. போய் கலக்குங்கள் என தமிழக வெற்றிக் கழக பூத் ஏஜென்ட் பயிற்சி பட்டறையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பேசியிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு இன்று கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

அப்போது அந்த மாநாட்டில் விஜய் பேசுகையில், கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் மண்ணோட மக்களோட மரியாதைதான் நினைவுக்கு வருகிறது. என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்.
பூத் கமிட்டி பயிற்சி பட்டறை
பூத் கமிட்டி பயிற்சி பட்டறை என்ற பெயர்தான் இருக்கிறது. ஆனால் பார்ப்பதற்கு வேறு ஒரு விழா போல் இருக்கிறது. இது ஓட்டுக்கான மீட்டு கிடையாது. என்னடா இது இவர் இப்படி சொல்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.
தேர்தல் அரசியல்
தேர்தல் அரசியலில் இருக்கிறோம். ஆனால் ஓட்டுக்காக மட்டும் கிடையாது. ஆட்சிக்கு வந்து நாம் என்ன செய்ய போகிறோம். இதுவரை செய்த மாதிரி நாம் செய்ய போவதில்லை.
மக்கள் நலன்
மக்களுக்காக மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். அதுதான் தேர்தல். இந்த பூத் பயிற்சி பட்டறையில் மக்களிடம் எப்படி ஓட்டு வங்குவது என்பதில்லை, மக்களுடன் மக்களாக ஒன்றிணைய போகிறோம்.
பொய் சொல்லி
இந்த கோவைக்கு நிறைய பேர் வந்திருக்கலாம், பேசியிருக்கலாம், பொய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கலாம். இதையெல்லாம் செய்து ஆட்சியை பிடித்திருக்கலாம். பழைய கதை. அதுக்கு நான் இங்கு வரலை. இனி அது நடக்காது, நடக்க விட போவதும் கிடையாது.
நம்பிக்கை
நம் கட்சி மீது மக்களிடம் நம்பிக்கை கொண்டு வருவது பூத் ஏஜென்ட்கள்தான். நீங்கள் போர் வீரனுக்கு சமம். நாம் அரசியலுக்கு எப்படி வந்திருக்கோம், ஏன் வந்திருக்கோம் அரசியல் அனுபவம் இருக்கா என மக்கள் கேட்பார்கள். நீங்கள் எல்லாம் போர் வீரர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்மிடம் என்ன இல்லை, கரை படியாத அரசியல் செய்யும் லட்சியம் இருக்கிறது.
மனசில் நேர்மை
மனசில் நேர்மை இருக்கு, பேசுவதற்கு உண்மை இருக்கு, உழைப்பதற்கு தெம்பு இருக்கு, செய்லபடுறதுக்கு திறமை இருக்கு, களம் ரெடியா இருக்கு இதுக்கு மேல என்ன வேண்டும். போய் விளையாடுங்கள். வெற்றி நிச்சயம் என கூறி தனது பேச்சை முடித்தார்.
விஜய் பேசியதும்
விஜய் பேசி முடித்ததும் தொண்டர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். நாளையும் கோவையில்தான் விஜய் இருக்கிறார். இந்த நிகழ்வில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசியிருந்தனர். ஆனால் விஜய் குறைந்த நேரத்தில்தான் பேசினார். இது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை தந்ததாகவே பார்க்கப்படுகிறது. கோவைக்கு தனி விமானத்தில் வந்து சாலை மார்க்கமாக மாநாட்டு இடத்திற்கு வந்ததற்கு நிறைய பேசியிருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. தவெக முதல் மாநில மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா, தவெக பொதுக் குழு ஆகியவற்றில் விஜய்யின் பேச்சு நீளமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
16 ஆயிரம் பேர்
இன்றைய மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க ஏற்கெனவே அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த மாநாட்டில் பூத் ஏஜென்டுகளிடம் ஒரு புத்தகமும் பென் டிரைவும் கொடுக்கப்பட்டது. அதை வைத்து அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications