தெலுங்கில் "மாட்லாடிய" நடிகை கௌதமி.. அதென்ன "ஒரு விரல்".. பூரித்து பார்த்த கோயம்புத்தூர் பொள்ளாச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுக வேட்பாளர்களுக்காக நடிகை கௌதமியின் பிரச்சாரம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?

தெலுங்கு மொழியில் பேசி பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பிரபல திரைப்பட நடிகை கவுதமி..

Actress Gowthami Telugu Campaign and Pollachi AIADMK candidate Karthikeyan

ஆர்வம்: இதுநாள்வரை பாஜகவில் இடம்பெற்றிருந்த நடிகை கௌதமி, அக்கட்சிக்காக ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.. எப்போதுமே கௌதமியின் பிரச்சாரங்கள் பொதுமக்களை கவர்ந்துவிடும்.

குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தில் வேனை தானாகவே ஓட்டிக்கொண்டு மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வந்தார்.. பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனை ஆதரித்து தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கவுதமி பிரச்சார வேனை பத்து கிலோமீட்டர் தூரம் ஓட்டி வந்து மக்களிடம் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.

பிரச்சார வேன்: பிரச்சார வேனில், பேச்சாளர்கள் வாக்கு சேகரித்து வரும்நிலையில், வேனையே ஓட்டிக்கொண்டு வந்து பொதுமக்களிடம் வாக்கு கேட்டது வெகுவாக ஈர்த்திருந்தது. அதேபோல, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகை கௌதமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ஆட்டோவை ஓட்டிகொண்டு வந்தார்.

இப்போது பாஜகவிலிருந்து விலகியிருக்கும் கவுதமி, அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.. அதிமுக வேட்பாளர்களுக்காகவும் வாக்கு சேகரித்து வருகிறார்.. இந்த முறையும் கௌதமியின் பிரச்சாரங்கள், மக்களை ஈர்த்து வருகின்றன.

இரட்டை இலை: நேற்றுகூட பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... மதுக்கரை மார்க்கெட், குளத்துப்பாளையம், ஆலாந்துறை, தென்னமநல்லூர், தேவராயபுரம் உள்ளிட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

ஆலாந்துறை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அங்கிருந்த பொதுமக்களுக்கு "யுகாதி பண்டிகை" தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்களை கூறினார். அத்துடன், திடீரென மைக்கைப் பிடித்து தெலுங்கில் பேசி, வாக்கு சேகரித்து ஆரம்பித்துவிட்டார்.

திமுக ஏமாற்றிவிட்டது: "திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துவிட்டோம்.. இந்த 5 வருடங்களாகவே கஷ்டப்பட்டு வருகிறோம்.. அதனால், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டுமானால், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றியடைய செய்யவேண்டும்" என்றார்.

அதுமட்டுமல்ல, "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், இரட்டை இலைக்கே வாக்களிப்போம்" என்று வெற்றி கோஷத்தை எழுப்பி பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.. தெலுங்கில் ஓட்டு கேட்டு வந்த கௌதமியின் இந்த பிரச்சார வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+