ஆதரவு, ஆதரவுன்னு முதுகில் குத்தாதீங்க.. திருமாவளவனை சாடிய அதியமான்
கோவை: உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவு என்று திருமாவளவன் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி கூறாமல் இருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் என்று வாய்மொழியாக மட்டுமே கூறி வருகிறார். அவர்களின் எந்த நடவடிக்கையும் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இல்லை என்று ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பில் மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு வழங்குகின்ற அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு செல்லும் என்பதையும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சென்னையா? ஆந்திரப்பிரதேசமா? என்ற ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் அந்த தீர்ப்பில் பட்டியல் இன மக்கள் அத்தனை பேரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஹோமோஜினியஸ் என்று இருப்பதாக குறிப்பிட்டார்கள்.
ஆனால் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் கடந்த காலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று கூறுவதுடன் பட்டியலின மக்கள் அனைவரும் ஹோமோஜினியஸ் அல்ல ஹெட்ரோஜீனியஸ், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்பாடு ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை இருக்கிறது.
எனவே, அவர்கள் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று இந்த உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநில அரசிற்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரம் உள்ளது என்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளது. வருங்காலத்தில் சரியான தரவுகளின் அடிப்படையில் இன்னும் பின்தங்கிய மக்கள் யாரேனும் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும் இட ஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தை தாக்கல் செய்துள்ளார். அந்த சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்தால் தமிழ்நாட்டில் உள்ள மூன்று சதவீதம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கூறுவதாகத்தான் அர்த்தம்.
உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவு என்று திருமாவளவன் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி கூறாமல் இருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் என்று வாய்மொழியாக மட்டுமே கூறி வருகிறார். அவர்களின் எந்த நடவடிக்கையும் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இல்லை. நேற்று முன்தினம் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அருந்ததிய மக்கள் வேற்று மொழியாளர்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.
அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்று அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையை திருமாவளவன் வெளியிட முடியுமா?. 20 ஆண்டுகால விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நடவடிக்கைகளில் என்றைக்காவது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்து போராட்டமோ, கருத்தரங்கமோ, பேரணியோ நடத்தி உள்ளீர்களா?.
உள் ஒதுக்கீடு என்பது வாழ்க்கை போராட்டம். 30 ஆண்டு காலமாகப் போராடி இந்த ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை கலைஞர்தான் கொடுத்தார்.
கூட்டணி கட்சியில் இருக்கும் பொழுது அந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்களோ, யார் அரசு ஆளுகிறார்களோ, அவர்கள் கொண்டு வருகின்ற மசோதாவை நீங்கள் ஆதரிக்க வேண்டும். எதிர்த்திருந்தால் நீங்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளியேறியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.
உள் ஒதுக்கீடு என்பது கலைஞரின் திட்டம், விடுதலைச் சிறுத்தைகளின் திட்டம் இல்லை. தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு என்கின்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீட்டை இதிலிருந்து ஏன் தருகிறீர்கள் என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்புகிறார். ஆனால், இதிலிருந்து எடுத்து தராமல் வேறு எதிலிருந்து எடுத்து தருவது.
தமிழ்நாட்டில் வரக்கூடிய அதிகாரத்தை வேண்டாம் என்று விசிக கூறிக் கொண்டிருக்கிறது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் பறித்து வருகிறது. திருமாவளவனின் நிலையான கருத்தில் நிற்க வேண்டும். எங்களை எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக கூறி விடுங்கள். ஆனால் அதனை கூறாமல் ஆதரிக்கிறோம் ஆதரிக்கிறோம் என்று கூறிக் கொண்டே விஷத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானதா?.
ஒட்டுமொத்த 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வகைப்படுத்துங்கள். உண்மையில் யார் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு கொடுங்கள். அருந்ததிய மக்கள் கீழ் ஏதேனும் சாதியினர் இருந்தால் அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்து கொடுங்கள். தமிழக முதல்வர் உடனடியாக இதற்கென ஒரு குழு அமைத்து வகைப்படுத்துதலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பாக சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதனை நிறைவேற்ற முடியும். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் அரிஜன நலத்துறை என்று இருந்ததை ஆதிதிராவிடர் நலத்துறை என்று மாற்றப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் என்ற பொதுப் பெயர் ஒரு சாதியின் பெயரை குறிப்பிடுகிறது. அதனை மாற்றி மத்திய அரசில் இருப்பதைப் போலவோ அல்லது வேறு ஏதேனும் பெயரையோ தமிழ்நாட்டில் சூட்ட வேண்டும்.
தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவியுள்ளோம். எங்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய பேரணியை உள் ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும், வகைப்படுத்துதலை ஆதரித்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் நடத்தப்படவுள்ளது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications