பாஜக வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு தொகுதியை தாரை வார்ப்பதா? சாபமிட்டு அதிமுக தொண்டர்கள் போராட்டம்
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதியை பாஜகவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் இன்று கோவையில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் புரண்டும் சாபமிட்டும் போராட்டம் நடத்தினர்.
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவரான வானதி சீனிவாசன் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் கோவை தெற்கு தொகுதியை பாஜக கேட்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஆனால் கோவை தெற்கு தொகுதி அதிமுகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ.வான அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள் இன்று கோவை அதிமுக அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டனர்.
கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு கொடுக்காதே! அதிமுகவுக்கே கொடு! அம்மன் அர்ஜூனனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடு! என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்டைகளை கழற்றி எறிந்துவிட்டு தரையில் படுத்து புரண்டபடியே முழக்கங்களும் எழுப்பினர்.
மேலும், கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுத்தால் நிச்சயம் அதிமுகவினர் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வோம். அதற்கான கடிதத்தையும் தயாராகவே வைத்திருக்கிறோம். எங்களது எதிர்ப்பை மீறி பாஜகவுக்கு இந்த தொகுதியை கொடுத்தால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் எனவும் ஆவேசமாக தெரிவித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications