அதிமுக வளர காரணம்.. சோதனைகளா? சாதனைகளா? ரரக்களுக்கு திடீர் “டவுட்”-பட்டிமன்றமே நடத்திய எஸ்பி வேலுமணி
கோவை: மக்கள் மனங்களில் அதிமுக நீக்கமற நிறைந்திருக்க காரணம் சோதனைகளா? சாதனைகளா? என்ற தலைப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார்.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.

அதிமுக நிகழ்வுகள்
இதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தடுத்து நடத்தி வருகிறது. கடந்த 29 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல்முறையாக தென் மாவட்டங்களுக்கு சென்றார்.

சிறப்பு பட்டிமன்றம்
அங்கு மதுரை மற்றும் விருநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா சார்பில் வரும் இன்று (அக்டோபர் 9 ஆம் தேதி) மாலை 4 மணியளவில் கோவையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

நடுவர் வைகைச்செல்வன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். "அரைநூற்றாண்டு கடந்து வீறுநடைபோடும் கழகம் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்க காரணம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நடுவராக செயல்பட்டார்.

விவாதம்
அதிமுகவை சேர்ந்த நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் கல்யாணாசுந்தரம், அதிமுக செய்தித்தொடர்பாளர் மகேஸ்வரி, கோவை மாவட்ட இலக்கிய அணி செயலாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் "கழகம் வென்று வந்த சோதனைகளே" என்ற தலைப்பிலும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த கோவை சத்யன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம் ஆகியோர் "கழகம் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளே..." என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications