இது எங்க ஏரியா.. கோவையில் ஆட்டத்தை தொடங்கிய வேலுமணி.. செந்தில் பாலாஜிக்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே உள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் ஓட்டை போட திமுக பல்வேறு அஸ்திரங்களை ஏவி வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு முன்னதாகவே அதிமுக தேர்தல் அறிக்கை குழு கோவை வந்துவிட்டது. தொழில்துறையினர் உள்ளிட்ட கோவை மக்களிடம் கருத்துகளை கேட்டு நம்பிக்கை அவர்களிடம் வேலுமணி ஸ்கோர் செய்துள்ளார்.

திமுகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தை கைப்பற்ற திமுக, தவெக தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. திமுக தொடர்ந்து அங்கு மாநாடுகளை நடத்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர்.

admk-velumani-s-move-to-capture-coimbatore-gave-shock-to-senthil-balaji

கொங்கு மண்டல அரசியல்

தேர்தல் களத்தில் கைத்தேர்ந்த செந்தில் பாலாஜி களமிறங்கியிருப்பது திமுகவுக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை அதிமுக அப்படியே கைப்பற்றி வந்தது. அதற்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டு, திமுகவை வெற்றி பெற வைக்க அவர்கள் தீவிரமாக முயற்சி வருகிறார்கள்.

செங்கோட்டையன் மூலம் தவெகவும் கொங்கு மண்டலத்தில் கால் பதிக்க திட்டமிட்டு வருகிறது. அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவர்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கி கொங்கு மண்டலத்தை தங்களின் கோட்டையாக தக்க வைக்க அதிமுக முயற்சித்து வருகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கை குழு

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சி.வி. சண்முகம், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் கோவை வந்துள்ளனர். அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர்கள் பல்வேறு தரப்பினரிடம் நேற்று கருத்துகளை கேட்டனர்.

விவசாயிகள், தொழில்துறையினர், நெசவாளர்கள், கல்வி நிறுவனம், மருத்துவம், ஐடி, குவாரி உரிமையாளர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டுள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கோவை மக்களிடம் கருத்து கேட்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் கோவை நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

வேலுமணி.. கோவை

இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, "கோவை மாவட்டத்திற்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக தான். கோவைக்கு திமுக எதையும் செய்யவில்லை. மக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக இல்லை. திமுகவுக்கு பெரு வாரியாக வாக்களித்த அரசு ஊழியர்கள் கூட அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இல்லை. தமிழகத்தில் மிகப்பெரிய மற்றும் முக்கிய திட்டங்கள் அனைத்துமே அதிமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். எம்ஜிஆர் பிறந்தநாளில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடியார் வெளியிட்டுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திமுகவை போல மக்களை ஏமாற்ற மாட்டோம்" என்றார்.

செந்தில் பாலாஜி ஷாக்

மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே அனைத்து தேர்தல் பணிகளையும் முடிக்க வேண்டும் என்ற பொது திட்டத்துடன் அதிமுக களமிறங்கும். மற்ற பகுதிகளில் சற்று தொய்வாக இருந்தாலும், கோவையில் திமுகவுக்கு முன்னதாகவே மக்களிடம் கருத்துகளை கேட்டு வேலுமணி நம்பிக்கை அளித்திருப்பதன் மூலம் செந்தில் பாலாஜி மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+