40 கார், 4 தனி விமானங்கள்.. கோவையை அலறவிட்ட ஆகாஷ் அம்பானி! ஊரே வியந்து போச்சு.. திடீர் விசிட் ஏன்!
கோவை: இந்தியாவின் பணக்கார தொழிலதிபர் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி தனது மனைவியுடன் சமீபத்தில் கோவைக்கு விசிட் அடித்துள்ளார். 4 தனி விமானம், 40 பாதுகாப்பு கார்கள் எனக் கோவையே வியந்து பார்க்கும் அளவுக்கு ஆகாஷ் அம்பானி பயணம் இருந்துள்ளது. அவர் எதற்காகக் கோவை வந்தார்.. எங்குத் தங்கினார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் டாப் பணக்காரர் என்றால் அது முகேஷ் அம்பானி தான். சமீபத்தில் தான் இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடந்தது. உலகமே வியந்து பார்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக அந்த திருமண விழா நடந்தது.

இந்த அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர். நண்பர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொள்ளவே அவர்கள் கோவை வந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அம்பானி குடும்பம்: அம்பானி குடும்பத்தைப் பொறுத்தவரை அவர்கள் விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். இந்த திருமணமும் அதே நாளில் நடந்துள்ளது. இருப்பினும், நெருங்கிய நண்பர் என்பதால் செப்.7ம் தேதி கோவைக்கு வந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டு திரும்பியுள்ளனர்.
32 வயதான ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியின் மூத்த மகன். அவர் ஷ்லோகா மேத்தாவை கடந்த 2019ம் ஆண்டில் மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கோவை சிறுவாணி அருகே நடந்த கோகுல்தாஸ் - நிக்கி திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணம்: கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி - சித்ரா தம்பதியின் மகள் மகள் நிக்கி. இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கோகுல்தாஸ் என்பவருக்கும் திருமணம் நடக்கிறது. கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த கோகுல் தாஸ் குடும்பத்தினர் இப்போது வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல நாடுகளில் பல தொழில்களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த கோகுல்தாஸும் ஆகாஷ் அம்பானியும் தான் நெருங்கிய நண்பர்கள். கோவை பெருமாள்பதியில் நடந்த திருமண வரவேற்பில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என கோகுல்தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். நண்பரின் பேச்சைத் தட்டாமல் கோவையில் நடந்த திருமண வரவேற்பில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார் ஆகாஷ் அம்பானி.
இதுதான் அம்பானி.. நொடிக்கு கிட்டதட்ட ஒரு கோடி.. 15 நிமிடங்களில் ரூ.53000 கோடிக்கு அதிபதியானார்!
தனி விமானம்: இதற்காகத் தனி விமானம் மூலம் கோவை வந்த ஆகாஷ் அம்பானி தம்பதி, அங்கிருந்து தனியார் ரிசார்ட்டிற்கு பாதுகாப்பு அதிகாரிகள் புடை சூழ ஆகாஷ் அம்பானி சென்றார். ஆகாஷ் அம்பானியுடன் வேறு சில தொழிலதிபர்களும் கோவை வந்ததாகக் கூறப்படுகிறது. 4 தனி விமானங்கள், 40 கார்கள் எனக் கோவையையே அலற வைக்கும் வகையில் ஆகாஷ் அம்பானி இந்த கல்யாணத்திற்கு வந்து சென்றுள்ளார். திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஆகாஷ் அம்பானி, அன்றைய தினமே மாலை மும்பைக்குத் தனி விமானம் மூலம் திரும்பிவிட்டார்.
அம்பானி குடும்பத்தினர் எப்போதும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிக கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். இதன் காரணமாகவே அம்பானி அன்றைய தினம் கோவையில் தங்காமல் மீண்டும் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்குத் திரும்பிவிட்டார். இந்த திருமண விழாவில் ஆகாஷ் அம்பானி மட்டுமின்றி மேலும் பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications