கோவை மதுரை மெட்ரோ ரயில்.. பச்சை பொய் சொன்ன தங்கம் தென்னரசு.. அண்ணாமலை அடுக்கடுக்கான புகார்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்நிலையில் பட்ஜெட்டில் திமுக சுய புராண மட்டுமே பாடியுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி பஞ்சாயத்து குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. திமுக கடந்து வந்த பாதை தெரியும். ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம் கோடி கடன் வைத்துள்ளனர். இது அடுத்தாண்டு ரூ. 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடனாக உயரும். அரசுக்கு கடன் சுமை குறைக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுமை ஏற்றி வந்துள்ளனர்.

சுய புராணம் பட்ஜெட்
குறைவான வருமானத்தையே ஈட்டியுள்ளனர். கடன் வாங்கும் அரசாக உள்ளது. கோயில்கள் புனரமைப்புக்காக 8 ஆயிரத்து 100 கோடி செலவு செய்துள்ளதாக சொல்லியுள்ளார்கள். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வேண்டும். விவசாயம் வெறும் 3 சதவீதம் தான் உயர்ந்துள்ளது. மத்திய அரசு கொடுத்த திட்டங்கள் தான் அந்த வளர்ச்சியை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு இவர்கள் சுயமாக ஒரு திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை.
இந்த பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு பூஜ்ஜியம் கொடுத்துள்ளது. திமுகவின் சுயபுராணம் தான் இருந்தது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனதுடன் யாரையும் அணுகவில்லை. மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டம் இல்லை என்று சொல்லவில்லை. திட்டம் வரைவு அறிக்கையை கொடுக்க சொல்லி 5 மாதங்கள் ஆகின்றது. ஆனால் இவர்கள் கொடுக்கவில்லை. மெட்ரோ விவகாரம் தொடர்பாக தங்கம் தென்னரசு பொய் சொல்லியுள்ளார்.
திமுக மாயாஜால வேலை
என்னுடைய வழக்கிற்காக நேற்று நானே வாதாடியுள்ளேன். வழக்கறிஞர் பணி எவ்வளவு சவால் என்று தெரிந்தது. பீகாரில் 10 ஆயிரம் கொடுக்கப்பட்டது யாரும் தவறு சொல்லவில்லை. அதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. ஆயிரம் ரூபாய் தடுத்தது யார். இதற்கு முன் கோடைக்காலம் வரவில்லையா. பெண்களுக்கு போகும் பணத்தை யாரும் தடுக்கவில்லை. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எங்கள் கூட்டணியும் மகளிருக்கு 2,000 கொடுப்பதாக சொல்லியுள்ளார்கள். .
பொது நிதியில் இருந்து தான் மகளிர் உரிமைத் தொகை கொடுக்க வேண்டும். வேறு நிதியில் இருந்து கொடுக்க கூடாது. ஆனால் திமுக அரசு மாயாஜால வேலை காண்பித்து வருகிறது. அக்கொண்டிங் பிராடிங் செய்து வருகிறது. சென்னை போராட்ட களமாக உள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை.
தனி மனித தாக்குதல் கூடாது
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி குழப்பமாக உள்ளது. இது யாருடைய கட்சி என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வர போவதில்லை. காங்கிரஸ் கட்சியினர் சண்டை போடாமல் வீட்டில் இருக்க வேண்டும்.
கரூர் விவகாரத்தை பொறுத்தவரை தனி மனித விமர்சனம் யார் வைத்தாலும் ஏற்புடையது இல்லை. ஜோதிமணியை நேற்று தொடர்பு கொண்டேன். பேச முடியவில்லை. இன்று அழைப்பார் என நம்புகிறேன். தேர்தல் காலம் என்பதனால் யாரையும் தாக்காமல் பேச வேண்டும். அரசியல் செய்வதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார்.
-
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications