Annamalai: பாஜகவுடன் கூட்டணியில் இணைய விஜய்க்கு மிரட்டலா? அண்ணாமலை கொடுத்த பலே விளக்கம்!
கோவை: பாஜக கூட்டணிக்கு வர தவெக தலைவர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பாஜக நிர்வாகி அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டதே தவெக தான் என்று கூறிய அண்ணாமலை, ஜனநாயகன் படத்தின் தாமதத்திற்கு காரணம் பாஜக தான் என்று விஜய் எங்காவது பேசி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கரூர் விவகாரம் தொடர்பாக நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக உள்ளார். இப்படியான சூழலில் தவெக - பாஜக இடையிலான கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கேற்ப திடீரென தவெக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் நேரடியாகவே புஸ்ஸி ஆனந்த் கூட்டணிக்கு செல்லலாமா என்று கேள்வி எழுப்பி பதில் பெற்றுள்ளார்.

பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் என்டிஏ கூட்டணிக்கு செல்லலாம் என்று ஆதரவு தெரிவித்திருக்கும் சூழலில், விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் தவெகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜனநாயகன் படம் சென்சார் விவகாரத்தில் சிக்கி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
அதேபோல் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு 3வது முறையாக அழைக்கப்பட்டுள்ளார். விஜய்யின் சொந்த வாழ்க்கை தொடர்பாகவும் பாஜக தான் முதலில் பேசியது. இதனால் தவெகவுக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டதே தவெக தான்.
தவெக கேட்டதால், நாங்களும் ஆதரவு அளித்தோம். அந்த சிபிஐ வைத்து தவெகவை நாங்கள் நெருக்கடி கொடுக்கிறோம் என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்.. அதேபோல் ஜனநாயகன் படத்திற்கு விஜய்யே எதுவும் பேசவில்லை. வேறு வேறு பொதுக்கூட்டங்களில் விஜய் பங்கேற்றுவிட்டார். நான் என்ன கருத்து சொல்ல முடியும்.. ஏதாவது ஒரு இடத்திலாவது விஜய் ஜனநாயகன் தொடர்பாக பேசினாரா?
ஏதாவது ஒரு இடத்தில் பாஜக தான் காரணம் என்று பேசினால் நான் பதில் அளிக்கலாம். அல்லது அந்த படத்தில் நடித்த நடிகரோ, தயாரிப்பாளரோ பாஜகவை குற்றம்சாட்டினால், நாங்கள் பதில் அளிக்கலாம். யாரும் எங்கேயும் சொல்லவில்லை. இது சென்சார் மற்றும் தயாரிப்பாளர் இடையிலான பிரச்சனை.. எங்களை யாரும் குற்றம் சுமத்தாத போது நாங்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை.
பாஜகவை குற்றம்சாட்டுவது திமுக தான்.. ஓநாய் அழுகிறதே என்று ஆடு அழுவுதாம்.. திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை.. சென்சார், நீதிமன்றம், விஜய் சம்மந்தப்பட்ட விவகாரம் ஜனநாயகன் படம்.. அதேபோல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏன் நடத்தினார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தவெக கூட்டத்தை பற்றி நான் பேச முடியாது. விஜய் மீதான எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications