நல்லா உற்று பாருங்க.. சேவகியே வருக வருக.. அண்ணாமலை போட்டோ இல்லாமல் வானதி போஸ்டர்.. கொதிக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

கோவை: நேற்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பயணத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அண்ணாமலை புகைப்படம் இல்லாமல் வெறுமனே எம்எல்ஏ வானதி சீனிவாசன் புகைப்படம் மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையாகி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் வந்தடைந்தது. இந்த கூட்டம் பற்றி பேசிய அண்ணாமலை, சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கரநாராயணர் அருள்பாலிக்கும் சங்கரன்கோவில் தொகுதியில், அரசியல் மாற்றம் வேண்டும் என்ற மாபெரும் எழுச்சியுடன் மக்களின் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. சங்கரன் கோவிலில் மட்டும் நான்காயிரம் விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயத்தையும் விசைத்தறியையும் நம்பியே சங்கரன்கோவில் உள்ளது.

Annamalai picture missed in Vanathi Srinivasan poster in En Mann En Makkal Yatra

பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி சேலையில் 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று தொடங்கிய திமுக அரசு இந்த ஆண்டு கொடுத்த இலவச வேட்டி வழங்குவதில் செய்த மாபெரும் விஞ்ஞான ஊழலை சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம்.

ஒரு கிலோ பருத்தி நூல் 320 ரூபாய். ஒரு கிலோ பாலியஸ்டர் நூலின் சந்தை விலை 160 ரூபாய். பருத்தி நூலில் நெய்ய வேண்டிய வார்ப் பகுதியை, பாலியஸ்டர் நூலில் நெய்து, கொள்முதல் செய்த 1.68 கோடி இலவச வேட்டியில் மட்டும், சுமார் 40 முதல் 60 கோடி வரை ரூபாய் ஊழல் செய்துள்ளார் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி.

Annamalai picture missed in Vanathi Srinivasan poster in En Mann En Makkal Yatra

மேலும் பெடல்தறியில் ஒரு வேட்டி நெய்ய 63 ரூபாய் வழங்கப்படுகிறது. விசைத்தறியில் நெய்தால் 23 ரூபாய். விசைத்தறியில் நெய்துவிட்டு, பெடல்தறியில் நெய்ததாகச் சொல்லி ஒரு வேட்டிக்கு 40 ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஞ்ஞான ஊழலுக்கு முழு உதாரணம் திமுகதான்.

அண்ணாமலை புகார்: வாசுதேவநல்லூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரளா மாநில எல்லைக்குள் செண்பகவல்லி அணை இருக்கிறது. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள இந்த அணை, 1733-ம் ஆண்டில் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானமும் சிவகிரி ஜமீனும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கட்டி முடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி தண்ணீர் முல்லைப்பெரியாறு அணைக்கும், மற்றொரு பகுதி தண்ணீர் தமிழக எல்லைக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தென்காசி மாவட்டத்தில் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக செண்பகவல்லி அணை திகழ்ந்தது.

Annamalai picture missed in Vanathi Srinivasan poster in En Mann En Makkal Yatra

1962ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், 1982ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் திரு எம்ஜிஆர் அவர்களும், அணையைப் பழுதுபார்க்க தமிழக அரசின் பங்கினை வழங்கினார்கள். ஆனால், கேரளா அரசு அன்று தொடங்கி இன்று வரை, இந்த அணையை சரிசெய்ய முன்வராமல் இழுத்தடித்து கொண்டு வருகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு, இந்த அணை பெரியார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது என்று கூறி இதற்கு மேல் இந்த அணையை இயக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக இது குறித்து ஒன்றுமே செய்யவில்லை. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனநீர் பிரச்சனைக்கு தீர்வு இந்த அணையை சரிசெய்தால் கிடைக்கும், என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

போஸ்டர்; நேற்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பயணத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அண்ணாமலை புகைப்படம் இல்லாமல் வெறுமனே எம்எல்ஏ வானதி சீனிவாசன் புகைப்படம் மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது சர்ச்சையாகி உள்ளது.

சேவகியே வருக வருக என்று அடிக்கப்பட்ட போஸ்டரால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜக கோவை மாநகர மாவட்ட தலைவர். ரமேஷ் குமார் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார். அண்ணாமலையின் யாத்திரை பற்றிய பேனரில் அண்ணாமலை போட்டோ இல்லாமல் வானதி சீனிவாசன் போட்டோ மட்டும் இருந்தது சர்ச்சையாகி உள்ளது.

இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் கடைசியில் சிறிய அளவில் அண்ணாமலை போட்டோ பிரிண்ட் எடுக்கப்பட்டு அதில் ஒட்டப்பட்டது. ஆனால் அதுவும் கூட சிறியதாக இருந்ததால் பெரிய அளவில் சர்ச்சையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+