முதல்வர் ஸ்டாலின் ரொம்ப பொய் சொல்றாரு.. கிராஸ் செக் பண்ணாம பேசலாமா? பதவிக்கு அழகல்ல..அண்ணாமலை பரபர!
கோவை: தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணிநேரத்தில் பாஜக சார்பில் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை தற்போது கோவை பகுதியில் மேற்கொண்டு வருகிறார். கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவில் அண்ணாமலை கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, காவடி ஆட்டம் ஆடினார். பின்னர் நொய்யல் ஆரத்தி வழிபாட்டில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதி வந்துள்ளது என்று நான் ஒரு புள்ளி விவரத்தை "என் மண் என் மக்கள்" பாத யாத்திரைக்கு முன்பு கொடுத்து இருந்தேன். ஆனால், தமிழ்நாட்டிற்கு குறைவான நிதி தான் அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தமிழகத்திற்கு குறைவான நிதி என்று குற்றசாட்டு வைக்கும் முதலமைச்சர், பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுத்தது என்று அறிவிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்ட எதை எடுத்துக் கொண்டாலும், எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அளவுக்கு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

எனவே, ரூ.10.76 லட்சம் கோடிக்கான புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் ஸ்டாலின் அதிகமாக பொய் பேசி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பேசுவதற்கு முன்பு அதை ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும் அல்லது உடன் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த பேச்சை தடுக்க வேண்டும்.
அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் மாட்டப்போகிறார். அதுவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொய் அதிகமாக பேசத் துவங்கி விட்டார்கள். எனவே, ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. நாங்கள் வெளியிடும் வெள்ளை அறிக்கையை அதிகாரிகளிடமும் கொடுத்து அந்த அறிக்கை பொய் என்று சொல்லட்டும், மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications