கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர் ஒட்டியிருக்கு.. பம்முறாரே! அண்ணாமலை அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட தயாராகி வரும் நிலையில், கமல்ஹாசனை கடுமையாக அட்டாக் செய்து கோவையில் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Annamalai severely attacks Kamalhaasan in coimbatore

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, "பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோவை தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோவை கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோவைக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோவை மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோவையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோவை மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுகவில் சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோவை மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள்.

இந்தியா முழுக்க கம்யூனிஸ்ட்களை ஒதுக்கி விட்டார்கள். கோவை, திருப்பூரில் மட்டும் ஒட்டிக் கொண்டுள்ளார்கள். வளர்ச்சியின் பிடியில் உள்ள நகருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி இருப்பது முரண். 2024ல் கம்யூனிஸ்ட்டை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே வைப்பீர்கள் என நம்புகிறேன். மகளிர் உரிமைத் தொகை பெரும்பாலானவர்களுக்கு வரவில்லை. சனாதனம் குறித்து பேசிய சின்ன பையன் உதயநிதியை பாஜகவினர் அடியோ அடி என அடிக்கிறார்கள் என சொல்லும் கமல்ஹாசன், 1098 க்கு அழைத்து புகார் அளிக்கலாம். 42 வயதான உதயநிதி ஸ்டாலினை 4 வயது குழந்தை போல பேசுகிறார்.

வேல் யாத்திரையின் போது வேலோடு அழைத்தது போல, 2024ல் இந்து மதம் நல்ல மதம் என முதலமைச்சர் சொல்லும் டிராமா நடக்கும். சனாதன தர்மம் தான் மற்ற மதத்தையும் மதிக்கும் தர்மம். சனாதன தர்மத்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சனாதன தர்மம் வெறுத்து இருந்தால் ஒரு கிறிஸ்தவர், முஸ்லிம் இங்கே இருக்க முடியுமா? பாஜக என்றால் இந்துத்துவா கட்சி என பொய் பிரச்சாரம் செய்தார்கள். திமுகவின் சாதி அரசியல், மத அரசியல், குடும்ப அரசியலை சல்லி சல்லியாக உடைத்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

2024 தேர்தல் எப்படி போகும் என்பது நமது கையில் இல்லை. நாடாளுமன்றத்திற்கு மட்டும் ஓட்டு போடுவீர்களா? சட்டமன்றத்திற்கும் ஓட்டு போடுவீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் எத்தனை தேர்தல் வந்தாலும் உங்கள் கை தாமரை பட்டனை அமுத்தும். 9 ஆண்டுகளாக மோடி இந்தியாவிற்காக உழைக்கிறார். பாஜக மீது பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. 2019 ல் செய்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது. ஒரு பொய்ச் செய்தி மக்களை ஏமாற வைத்துவிட்டது.

அடுத்த ஏழு மாதங்களுக்கு அதிகமான பொய்கள் பரப்பப்படும், ஒரு பொய்யை பார்த்து கடந்து போகாமல், ஒரு பதிவை போடுங்கள் ஒவ்வொருவரும் நரேந்திர மோடியாக அடுத்த ஏழு மாதங்களுக்கு வேலை செய்ய வேண்டும். 400 எம்.பிக்களுடன் மீண்டும் மோடி பிரதமராக அமருவார். மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்ததால், காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. மோடி மீது ஊழல் புகார்களை கூறும் முதலமைச்சருக்கு நீங்கள் பதிலடி தருவீர்கள். 39 க்கு 39 எம்.பி.க்களை தந்து மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+