தென்றல் செல்வராஜ் திடீர் நீக்கம்! கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வரதராஜன் நியமனம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதில் கி.வரதராஜன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தென்றல் செல்வராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர். கி. வரதராஜன் (பொள்ளாச்சி), கோவை தெற்கு மாவட்டக் கழகப்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

பொறுப்புக்குழு

பொறுப்புக்குழு

ஏற்கனவே நியமிக்கப்பட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் இவருடன் (டாக்டர் வரதராஜனுடன்) இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு துரைமுருகன் வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வேட்பாளர்

பொள்ளாச்சி வேட்பாளர்


பொள்ளாச்சி தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தான் டாக்டர்.வரதராஜன். அவர் தோல்வி அடைய கட்சிக்குள் இருந்த பூசல்கள் தான் காரணம் என்று கட்சிக்குள் கலகக்குரல்கள் எழும்பின. ஏனெனில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதிருப்தியைக் கடந்தும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது பலரையும் அதிர வைத்தது.

தென்றல் செல்வராஜ்

தென்றல் செல்வராஜ்

கோவை மாவட்டத்தில் திமுகவின் மொத்த தேர்தல் தோல்விக்கு கோஷ்டி பூசல் விவகாரம் காரணம் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜை மாற்ற வேண்டும் என்று குரல்கள் ஒலித்ததால் அவர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

திமுக ஆக்சன்

திமுக ஆக்சன்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. அதிமுக 9 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இது
தொடர்பாக விசாரணை நடத்தி வரும் திமுக தலைமை, இப்போது முதல்முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது. இனியும் நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+