கோவை-பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் சத்தமில்லாமல் சம்பவம்.. பயணிகளுக்கு இன்று முதல் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22665) இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. கூடுதல் பெட்டி இணைப்பால் கோவை, பெங்களூர் இடையே செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கோவையில் இருந்து பெங்களூர் நகருக்கு ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் அதிகாலை 5.45 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் என்ற இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மதியம் 12.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதேபோல் கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் உதய் எக்ஸ்பிரஸ் இரவு 9.15க்கு கோவை வந்துவிடும்.

Bangalore-Coimbatore Uday Express train to get 2 additional coaches from today

ஒரே நாளில் கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் சென்று, அன்று இரவே கோவை திரும்புவதால் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு அதிகம் ஆகும். ஏனெனில் கட்டணமும் மிக குறைவு. இந்த ரயிலில் இதில் 5 இரட்டை அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 5 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினர், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மற்றும் பலர் இந்த ரயிலை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கொங்கு மண்டலத்தை பெங்களூருடன் இணைக்கும் இந்த ரயிலில் எப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்த சூழலில் தசரா பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கோவை-பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22665) இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். அதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+