தமிழகத்தில் பாஜக நுழைய திமுக தான் காரணம்! எடப்பாடி முன் ‛அட்டாக்’ செய்த நோவா யுவணராஜ்! யார் இவர்?
கோவை: தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற காரணமாக இருந்ததே திமுக தான். வாஜ்பாய் அரசுடன் திமுக தான் கூட்டணி அமைத்தது. இதனை நாம் மறந்துவிடக்கூடாது என தமிழ்நாடு ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவர் நோவா யுவணராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
கோவை கருமத்தம்பட்டியில் இன்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் முப்பெரும் விழா இன்று நடந்தது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவரும், செபி பேராயத்தின் தேசிய தலைவருமான நோவா யுவணராஜ் தலைமை வகித்ததோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் திமுகவை நம்பி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிறிஸ்தவர்கள் அநீதி இழைத்துவிட்டதாக கூறி மேடையில் வருத்தம் தெரிவித்தார்.
அதோடு தமிழ்நாட்டில் சிறுபான்மையின மக்களின் பாதுகாவலர் எனக்கூறி வரும் திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பாஜக எப்படி வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பாரத பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் முதல் முதலாக யார் கூட்டணி வைத்து பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற காரணமாக இருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது. இன்று நாங்கள் விழித்துவிட்டோம். ஆகையால் இது ஆரம்பம் தானே தவிர இது முடிவு அல்ல.
வரும் 9ம் தேதி சென்னை நந்தனத்தில் சமத்துவ உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் உள்ள 3 கோடி கிறிஸ்தவ மக்களின் உரிமையை மீட்க இந்த மாநாட்டில் கூடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ மக்களின் உரிமையையே மீட்க முடியவில்லையே. இவர்களால் எப்படி இந்தியாவின் கிறிஸ்தவ மக்களின் உரிமையை எப்படி மீட்க முடியும்?

எங்களுக்கு அரசியல் செய்ய தெரியாது. இது அரசியல் பொதுக்கூட்டமும் இல்லை. நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். பொய் சொல்லவும் எங்களுக்கும் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களுக்கு சமூகநீதி பிரச்சனை பற்றி நான் பேச உள்ளேன். முதலில் எதிர்க்கட்சி தலைவரிடம் நாங்கள் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஏனென்றால் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் கடந்த தேர்தலிலேய உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டோம். அதனை மனதார ஒப்புக்கொள்கிறோம். அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் இப்போது ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்ற கழக அரசு சிறுபான்மையினருக்கு நாங்கள் தான் பாதுகாவலர். அவர்கள் (அதிமுக) தேசிய ஜனநாயக கூட்டணி. அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். அவர்களால் கிறிஸ்தவம் ஒருநாளும் பாதுகாக்கப்படாது எனக்கூறி நயவஞ்சகமான பேச்சால் எங்களை திசைதிருப்பினார்கள். இந்த பேச்சை நம்பியே நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம்'' என காட்டமாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications