நான் சவால் விட்றேன்! ‘தனித் தமிழ்நாடு’ திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? கோவையில் கொந்தளித்த வானதி!
கோவை : இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன், தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

வானதி சீனிவாசன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது விலைவாசி உயர்விற்கு போராடியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வுக்கு காரணமாக மாறிவிட்டனர். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் பொய்ப்பித்தலாட்டம் என்பது திமுகவினரின் DNA விலேயே உள்ளது. தமிழகத்தில் மின்சாரத்தைப் பொறுத்தவரை தற்பொழுது 100 யூனிட் இலவச திட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதாகவும் மின்கட்டண உயர்வு சிறுகுறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிப்படையும். திமுக அரசு விலையை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மேல் பழி போடுகின்றனர்.

தனி தமிழ்நாடு
இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? நான் சவால் விடுகிறேன், தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது பிரிவினை தான்? மத்திய அரசின் உதவி இல்லாமல் தாமாக மின்சாரத்தை தயாரித்து கொள்வார்களா? தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் குரலை பாஜக தான் கொடுக்கிறது. மதுபான விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம் என சொல்வார்களா?

மோடி தான் காரணம் ?
பாஜகவினர் அந்த கடைகளுக்கு(மதுபான கடை) எல்லாம் போக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மதுபானங்களின் விலை ஏற்றத்திற்கு பாஜக காரணம் என சொன்னார்களா? அவர்கள் கூற மாட்டார்கள்? தமிழகத்தில் எதன் விலை ஏறினாலும் மோடி தான் காரணம் பாஜக தான் காரணம் திமுக ஆட்சிக்கு வந்த சுமார் ஆறு மாத காலத்தில் நல்ல ஆபிசர்களை வேலைக்கு போட்டு நல்லாட்சி செய்வதாக காண்பித்தார்கள் எனவும் ஆனால் தற்பொழுது கமிஷன் வாங்கி வருவதாகவும் மணல் எடுப்பதற்கு அரசு அலுவலர் கையொப்பம் இடுவதற்கு பதிலாக திமுகவினரே கையொப்பமிட்டு மணல் எடுத்து கொண்டு சென்று விடுவதாக தெரிவித்த அவர் இதுவா நேர்மையான ஆட்சி

திமுக அரசு
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சமுதாயத்தில் அனைவரையும் பாதிக்ககூடிய அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகவும், மத்திய அரசு கூறியதால் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என உண்மைக்கு புறம்பாக அவர்கள்(திமுக) பேசுகின்றனர். தமிழகத்தில் அனைத்தையும் நாங்களாகவே பார்த்துகொள்ள முடியும் அனைத்தையும் நாங்களாகவே நிர்வகித்து கொள்ள முடியும் என ஒருபுறம் கூறி விட்டு மறுபுறம் மின்சாரம் மாதிரியான தேவையானவற்றை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் திமுக அரசு நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications