‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’ – கொந்தளித்த வானதி சீனிவாசன்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "வந்தே மாதரம் பாடலுக்கு 150 வருடங்கள் ஆகியிருப்பதை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியே முன்னின்று கொண்டாடி வருகிறார். இது கட்சி நிகழ்ச்சியோ, பாஜகவிற்கு சொந்தமான பாடலோ கிடையாது.

வந்தே மாதரம் அனுமதி மறுப்பு
அதைக் கொண்டாடும் வகையில் கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி சிலை முன்பு, பள்ளி குழந்தைகளுடன் அந்தப் பாடலை பாட திட்டமிட்டிருந்தோம். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இன்று நடைபெற திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு நேற்று இரவு 10 மணிக்கு அனுமதி மறுக்கின்றனர். திமுகவுக்கு பாரத அன்னை என்றால் பிடிக்காது. பாரத் மாதா என்றாலும் பிடிக்காது.
வந்தே மாதரம் பாட்டு பாஜகவுக்கு சொந்தம் அல்ல. அது நாட்டுக்கான பாடல். தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பாடல். சுதந்திர போராட்டத்தில் அதிகளவில் பங்கு வகித்தது நம் தமிழ்நாடு. ஆனால் அதை திமுக அரசு மறந்து விட்டது. எப்போமே தேசபக்திக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்துள்ளது.
ஸ்டாலினுக்கு எச்சரிக்கை
சிறை சாலையில் வ.உ.சி நினைவு இடத்தில் வந்தே மாதரம் பாடல் பாட அனுமதி கேட்டதற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுக்கிறார்கள். தேச பக்தியை வளர்க்க முயற்சித்தால், அதற்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்து தடை போடுகிறார்கள். தமிழகம் எப்போதும் தேசியம் பக்கம் தான் நிற்கும். ஒரு இடத்தில் அனுமதி மறுத்துள்ளதால், ஒவ்வொரு தெருவிலும் நாங்கள் இந்த பாடலை பாட திட்டமிட்டுள்ளோம்.
வந்தே மாதரம் என்ற ஒரு வார்த்தை உங்களை வீட்டுக்கு அனுப்பும் முதல்வரே. தேர்தல் ஆணையத்தின் SIR விவகாரத்தில் மாநில அரசு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இது ஏதோ புதிது கிடையாது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் ஒருவர் கூட வாக்கு உரிமை பறித்து விட்டார்கள் என்ற புகார் தெரிவிக்கவில்லை.
விஜயால் அது முடியாது
நம்முடைய வாக்காளர் பட்டியலை தூய்மையாகவும், நேர்மையாகவும் வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தான் இந்த பணியை செய்து வருகிறார்கள். ஆனால் SIR செய்யக்கூடிய படிவங்களை திமுகவினர் வாங்கி பூர்த்தி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். திமுக அரசு எவ்வளவு குளறுபடி செய்தாலும் அதை முறியடிப்போம்.
திமுக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். எல்லா கட்சியையும் தட்டி பார்க்கலாம் என நினைக்கலாம். சினிமா பாடல்களை அரசியலில் பயன்படுத்துவது புதிது கிடையாது. விஜய் திமுகவை எப்படி தனியாக வீழ்த்த முடியும். ஒன்றாக சேர்.. ஒன்றாக சேர்.. என்று சொல்லும் விஜய் யாருடன் சேரப் போகிறார் என்பதை விஜய் தான் சொல்ல வேண்டும்." என்றார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்











Click it and Unblock the Notifications