கோவை பாஜக அலுவலகம் மீது குண்டு வீச்சு..எதற்கும் பயப்பட மாட்டோம்..சொல்வது காடேஸ்வரா சுப்ரமணியன்
கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியை கைது செய்யும் காவல்துறைக்கு ஒரு லட்சம் பரிசு இந்து முன்னணியால் வழங்கப்படும் என்று காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அவசர நிலை காலத்திலேயே வழக்குகளை பார்த்து அதிலேயே பயிற்சி எடுத்து வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எதற்கும் பயப்பட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமாருக்கு 6 -ம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக்கூட்டம் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், நான் ஆ.ராசா கருத்தை ஒப்பிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், ஆ.ராசா மனைவி குடும்பம் குறித்தும் கருத்துக்களை பேசினால் நாளை காலை 3 மணிக்கு எனது வீட்டிற்கும் போலீசார் வந்து கைது செய்வார்கள் என்றார்.

வழக்குகளை பார்த்து விட்டோம்
இந்த மாதிரி வழக்குகளையெல்லாம் பார்த்து விட்டு வந்து விட்டோம், கோவை கலவரத்தின் போது 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அனைவரையும் 2 கோடி ரூபாய் கட்டி ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளோம்.

பிரதமர் மோடி
அவசர நிலை காலத்திலேயே வழக்குகளை பார்த்து அதிலேயே பயிற்சி எடுத்து வந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்
நமது பிரதமர் பலமான பிரதமர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சீனாவை மிரட்டிக் கொண்டிருக்கிறார், சீனா இன்று பயப்படுகிறது. இந்த பயத்தின் காரணமாக திமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்டோருக்கு பணம், ஆயுதத்தை வழங்கி வருகிறது. அதனை மோடி அரசு கண்காணித்து வருகிறது.
63 நாடுகள் ஒன்று சேர்ந்து இந்தியாவை உடைக்கப்பார்கிறார்கள் அதற்கு ராசா மாதிரி ஆட்களை பயன்படுத்துகிறார்கள். ஆ ராசாவை கண்டித்து கோவையில் இந்து முன்னணி சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது அதில் திமுகவினர் உள்ளிட்டோறும் கடைகளும் மூடப்பட்டு முழுமையான வெற்றி பெற்றது இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் திமுகவில் சேர்ந்த நபர்கள் இந்து முன்னணி கொடி கம்பம் என நினைத்து விஹச்பி கொடிக்கம்பத்தை உடைத்தனர்.
இது குறித்து நாங்கள் நீண்ட நேரம் காவல் நிலையத்தில் காத்திருந்து புகார் அளித்தும் கம்பத்தை முறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக உயர் அதிகாரிகள் கைது செய்யக் கூடாது என எங்களுக்கு உத்தரவு போட்டுள்ளதாக கூறுகின்றனர்.

போதை பொருள் விற்பனை
அதேபோல் கோவையில் அதிகளவு போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது இதை பெரும்பாலும் இஸ்லாமியர்களை செய்து வருகின்றனர். அதேபோல் திமுகவினரும் போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கோவையின் மாநகர துணை ஆணையாளராக உள்ள சிலம்பரசன் ஒரு கோடி ரூபாய் கொடுத்து இந்த பதவியை பெற்றுள்ளார் இதனால்தான் போதை பொருள் விற்பனை நடைபெற்றாலும் கண்டுகொள்ள வில்லை.

ரூ. 1லட்சம் பரிசு
அவர் பதவியை பெற கொடுத்த பணத்தை இவ்வாறு தான் எடுக்க முடியும் என தெரிவித்தார். மேலும் கோவை பாஜக மாவட்ட தலைவர் கைது செய்தபோது மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். தற்போது பாஜக கோவை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது இதில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யும் காவல்துறைக்கு ஒரு லட்சம் பரிசு இந்து முன்னணியால் வழங்கப்படும் என்றும் காடேஸ்வரா சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications