இறந்த பெண்ணின் உடலை தின்ற பூனை.. தமிழகத்தில் ஷாக் செய்தி!
கோவையில் பெண்ணின் சடலத்தை பூனை கடித்து தின்றுள்ளது.
Recommended Video

கோவை: இறந்து போன பெண்ணின் உடலை பூனை தின்று கொண்டிருக்கிறது என்ற செய்திதான் தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போன 16-ந்தேதி ஒரு பெண் உடல்நிலை சரியில்லை என்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு 45 வயது இருக்கும். கூடபிறந்தவங்க, சொந்தக்காரங்க என்று யாருமே அவருக்கு இல்லை போல. தனியாகத்தான் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்.
வார்டில் அனுமதித்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்து விட்டார். அந்த பெண்ணின் பேரும், ஊரும் எதுவுமே தெரியாது. அதனால வார்டிலேயே அப்படியே போட்டு வைத்திருந்திருக்கிறார்கள்.

கடித்து தின்ற பூனை
இதுபற்றி தகவல் சொல்லப்பட்டும், ஊழியர்கள் பிணவறைக்கு அவரை கொண்டு செல்லவே இல்லை. தரையிலேயே பெண்ணின் பிணத்தை கிடத்திவிட்டு போய்விட்டார்கள். இந்த சமயத்தில்தான் நேத்து ராத்திரி நேரத்தில் ஒரு பூனை வந்திருக்கிறது. பெண்ணின் பிணத்தையே சுற்றி சுற்றி வந்து... கடைசியில் அந்த பெண்ணின் காலை கடித்து தின்ற ஆரம்பித்துவிட்டது.

கண்டு கொள்ளவே இல்லை
இதை மற்ற நோயாளிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடிப்போய் டாக்டர்கள், ஊழியர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். அப்போதும் அவர்கள் யாருமே இதை கண்டுகொள்ளவில்லையாம். பெண்ணை பூனை கடித்து தின்றும் காட்சியை நோயாளிகளே படம் பிடித்து இணையத்தில் போட்டு விட்டார்கள்.

பூனைகள், எலிகள்
இந்த வீடியோ வைரலானது.. தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்துதான், மருத்துவ ஊழியர்கள் இறந்த பெண்ணின் உடலை அவசர அவசரமாக பிணவறைக்கு கொண்டு சென்றார்களாம். அதுமட்டும் இல்லை.. ஆஸ்பத்திரியில எப்பவுமே பூனைகளும், எலிகளும், விஷ ஜந்துக்களும் நிறைய சுற்றி சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமையா?
இதனால் நோயாளிகளும், அவர்களுடன் தங்குபவர்களும் பீதியிலேயே உள்ளனர். ஆதரவற்றவர் யாருமே இல்லை என்பதற்காக ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமையா? ஒருநாளைக்கு 7 ஆயிரம் பேர் வந்து போகிறார்கள் என்று சொல்லக்கூடிய கோவை அரசு ஆஸ்பத்திரியில் இந்த நிலைமையா? பெண்ணை பூனை கடித்து தின்ற வீடியோ வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications